♥1. நீங்கள் யாருக்காவது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகையில், அவர்கள் உங்களது அழைப்பை ஏற்காமல் போனால், இரண்டு முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டாம். உங்கள் அழைப்பை ஏற்பதை விட முக்கியமான பணிகளில் ஈடுபட்டு இருக்கலாம். அவரே பின்னர் உங்களுக்கு அழைப்பை எடுப்பார்...
♥2. பணமோ அல்லது பொருளோ கடனாகப் பெற்றால், அதை கொடுத்தவர்கள் கேட்பதற்கு முன் திருப்பிச் செலுத்துங்கள். இதுதான் உங்கள் நேர்மை மற்றும் தனித்தன்மையை காட்டும்.
♥3. உங்களுக்கு விருந்தளிக்க யாரேனும் உணவகம் அழைத்துச் சென்றால் விலையுயர்ந்த உணவுகளை தேர்வு செய்யதீர்கள். அதற்கு பதிலாக உணவு தேர்வு செய்வதை அவரிடமே விட்டு விடுங்கள்.
♥4. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லையா? உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்க வில்லையா? நீங்கள் இன்னும் சொந்தமாக வீடு வாங்க வில்லையா? இது போன்ற கேள்விகளை யாரிடமும் கேட்டு காயப்படுத்தாதீர்கள்.
♥5. நீங்கள் எங்கேனும் கதவைத் திறந்து செல்லுகையில், பின்னால் யாரேனும் வந்தால் அவர்களுக்கும் வழி விட்டு பிறகு கதவை அடையுங்கள்.
♥6. உங்களது நண்பருடன் வாகனங்களில் (car, bus) பயணம் செய்கையில் பயணக் கட்டணத்தை அவரே செலுத்தி விட்டால், அடுத்தமுறை ஞாபகம் வைத்து நீங்கள் செலுத்துங்கள்.
♥7. மற்றவரது கருத்துக்களுக்கும் மரியாதை கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். பேசிமுடிய பேசுங்கள்...
♥பல பேருடன் உணவு சாப்பிடுகையில் சத்தம் வருமாறு சாப்பிடாமல்.. வாயை மூடியவாறு மென்று சாப்பிடுங்கள்...
0 Comments
Thank you