♥#இளமை_முதுமை..!
♥இனியும் வேண்டும் என்பது இளமை.
இனியும் வேண்டாம் என்பது முதுமை.
♥இனி எப்போ விடியும் என்பது இளமை.
இனி ஏன் விடிகிறது? என்பது முதுமை.
♥மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை.
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை.
♥இனிதான் இனிமையான வாழ்வு என்பது இளமை.
இனிதான் கசப்பான வாழ்வு என்பது முதுமை.
♥மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை.
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை.
♥வாழும் காலம் இனிமை என்பது இளமை.
வாழும் காலம் நரகம் என்பது முதுமை.
♥சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை.
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை.
♥ஆண்டுகள் கடக்கின்றன, அனுபவங்கள் கிடைக்கின்றன, வாழ்வில் இறப்பு வருவது உறுதி. இருக்கும் வரை முதுமை என்ற நினைவு வராமல், இறைவனை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்தி, தொழுது உயிர்போகும் வரை இளமை நினைவோடு இருந்தால் எக்காலமும் மகிழ்வுதான்.
0 Comments
Thank you