♥கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்? என்ன அறிகுறி?
♥மார்பகத்தில் வலியோ புண்ணோ ஏற்படுவது பெண்களுக்கு இயல்பான ஒன்றாகும். பெண்கள் பருவம் அடைந்த நாட்கள் முதல் கர்ப்ப காலம் மற்றும் அதற்கு அப்பால் மார்பக வலி வரக்கூடும். அவை வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். புண் மார்பங்கள் ஏற்படுவது கர்ப்ப காலத்தின் முதல் அறிகுறியாகும்.
♥ஆனால் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுவது இல்லை. எல்லா பெண்களுக்கும் தங்களது மாதவிடாய் சுழற்சி ஏற்படும் போது மார்பகங்கள் வலிப்பது இயல்பு. உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சரி செய்யவே இத்தகைய சுழற்சி ஏற்படுகிறது.
♥உங்களது மார்பகங்கள் மாத விடாய் சுழற்சி வரும் நாட்களுக்கு முன்பு பெரிதாக இருப்பதை உணருவீர்கள். இந்த மாற்றங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. சிலர் இந்த மார்பக வலியை கனமாகவும் சிலர் மென்மையாகவும் உணருகிறார்கள். மற்றும் சில பெண்கள் மார்பகத்தை சுற்றி உள்ள காம்பு பகுதியில் கூச்ச தன்மையை உணருகிறார்கள். இந்த கூச்ச தன்மை அறிகுறியே கர்ப்பிணி பெண்களின் முதல் அறிகுறியாகும்.
♥#மார்பக_வலிக்கு_என்ன_காரணம்?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக வலிக்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் மார்பகங்கள் வலிக்கிறது. உங்கள் கர்ப்பகாலத்தில் உங்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் புரோலாக்டின்களை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதற்கான அடிப்படை வேலைகளை செய்கிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக வலிக்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் மார்பகங்கள் வலிக்கிறது. உங்கள் கர்ப்பகாலத்தில் உங்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் புரோலாக்டின்களை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதற்கான அடிப்படை வேலைகளை செய்கிறது.
♥முதன் முதலில் பால் கொடுக்க ஆரமிக்கும் போது வழியை தான் உணருவீர்கள். மேலும் சில பெண்கள் பால் கொடுக்க ஆரமிக்கும் போது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை திசு வீக்கத்தை உணருகிறார்கள்.இதனால் மார்பகங்கள் வீங்கி புண்ணாக மாறி விடுகிறது.
♥முதலாவதாக கர்ப்ப ஹார்மோன்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் இரத்த அளவை அதிகரிக்க செய்து உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைக்கிறது.
♥அடுத்த ஹார்மோனானது உங்களது மெலனோசைட்டுகள் அல்லது நிறமி செல்களில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த ஹார்மோன்களானது உங்கள் முலை காம்புக்கு நிறத்தை கொடுத்து அவற்றை சற்று வெளியே உயர்த்துகிறது. இது உங்கள் குழந்தைக்கு எளிதாக உதவுவதாக இருக்கும். கர்ப்ப காலத்தின் முன்றாவது மாதத்தில் பால் சுழற்சி தூண்டும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. இந்த தூண்டலுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் உதவி செய்கிறது.
♥மேலும் இந்த ஹார்மோன்கள் மார்பக வளர்ச்சியை ஊக்குவித்து தாய்ப்பாலினை சேமிக்க துவங்குகிறது. இந்த அடுத்த அடுத்த மாற்றங்களினால் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள். மேலும் உங்கள் மார்பகங்கள் மென்மையற்றதாகவும், சற்று புண்ணாகவும் இருக்கும். ஆனால் இந்த வலியானது கர்ப்பகாலம் நெருங்கும் போது குறைய தொடங்கி விடும். முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு சில பெண்கள் இந்த வழியை பழகிக் கொள்ளகிறார்கள். கர்ப்ப காலத்திற்கு பின்பு வலி முற்றிலும் நீங்கி விடும்.
♥ மார்பக மென்மையற்ற தன்மையை நீக்குதல் உங்கள் கர்ப்ப காலத்திற்கு பின்பு புண் ஆறி விடும் என்பது நல்ல செய்தி. ஆனால் புண் இருக்கும் போது அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். சில எளிமையான வழிகளை பின்பற்றி அவற்றை பெரிதாக விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
♥தேர்ந்தெடுக்கப்பட்ட பிரா உங்கள் உள்ளாடைகளை சரியானதாக தேர்வு செய்வது அவசியம். மோசமான பிராக்களை அணிவது மேலும் அவதிப்பட வழிவகுக்கும்.
உங்களது மார்பகங்களுக்கு ஏற்றவாறு சரியான அளவில் நல்ல கம்பெனி பிராக்களை தேர்வு செய்வது அவசியம். இது உங்கள் மார்பகங்களை பாதுகாக்கும். உங்களுக்கு வேண்டுமானால் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொள்ளலாம். தூங்க செல்லும் போது ஸ்லீப் ப்ரா அணிந்து கொள்வது நல்லது.
உங்களது மார்பகங்களுக்கு ஏற்றவாறு சரியான அளவில் நல்ல கம்பெனி பிராக்களை தேர்வு செய்வது அவசியம். இது உங்கள் மார்பகங்களை பாதுகாக்கும். உங்களுக்கு வேண்டுமானால் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொள்ளலாம். தூங்க செல்லும் போது ஸ்லீப் ப்ரா அணிந்து கொள்வது நல்லது.
♥தொடுதல் கூடாது .கர்ப்ப காலத்தில் உங்களது மார்பகங்கள் கவர்ச்சியாக இருப்பதால் உங்கள் கணவர்களை ஈர்க்க கூடும். ஆனால் அவற்றை தொடுவதும், அழுத்தம் சேர்ப்பதும் மேலும் புண்களை ஏற்படுத்தும். எனவே மார்பங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.
♥இறுக்கமான ஆடை தவிர்த்தல் .உங்கள் மார்பகங்கள் பெரிதாக மாறுவதால் நீங்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் சற்று பெரிய ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகள் அணியும் போது அழகாக இருந்தாலும் உங்கள் மார்பகங்களை எரிச்சல் அடையச் செய்யும்.
♥ஐஸ் மசாஜ் உங்கள் மார்பில் ஒரு துண்டை போட்டு விட்டு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இது உங்களுக்கு சற்று வழியை குறைத்து மென்மையாக மாற்றும். வெது வெதுப்பான குளியல் உங்களுக்கு ஐஸ் மசாஜ் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வெது வெதுப்பான நீரில் ஒரு குளியல் போடலாம். இது உங்கள் உடல் வலி மற்றும் மார்பக வலியில் இருந்து விடுதலை தரும்.
♥மருத்துவர் ஆலோசனை உங்களுக்கு மார்பகத்தில் தாங்க முடியாத அளவு வலி வந்தால் உங்கள் மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும். பிரசவத்திற்கு பின்பு மார்பக வலி குழந்தை பிறந்த பின்பு மார்பக வழியில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்து இருப்பிர்கள். ஆனால், குழந்தை பிறந்த பின்பும் மார்பக வலியால் அவதி படுகிற பெண்களும் உண்டு. அதாவது, முதன் முதலில் பால் வெளியே வருவதற்காக வலி ஏற்படுகிறது. முதலில் உங்களது மார்பகங்கள் கட்டியாக பாறை போல் இருக்கும். உங்கள் உடல் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும், எப்போது தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வலி ஏற்படுகிறது. பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இந்த வலியானது தானாகவே சரி ஆகி விடும்
Hashtag : #abishakram #asr #abishakramasr Website : https://www.abishakram.com https://www.abishakram.xyz Facebook : https://www.facebook.com/abishakram05 Facebook page : https://www.facebook.com/abishakram55 Instagram : https://www.instagram.com/abishakram5/ Twitter : https://www.twitter.com/abishakram5 Youtube : https://www.youtube.com/abishakram Blog : https://ramabishak.blogspot.in Wordpress blog : http://abishakram.wordpress.com Email : ramabishakasr@gmail.com Imo : https://call.imo.im/abishakram5 Messenger : https://m.me/abishakram05 Telegram : https://telegram.org/abishakram5 Tiktok : https://vm.tiktok.com/uLJR6s Sharechat : https://sharechat.com/profile/abishakram5 Hello http://m.helo-app.com/al/wQebswMSs All no,Whatsapp no : 9443479085 Google : https://www.google.co.in/search?q=abishakram Google : https://www.google.co.in/search?q=abishak+ram Google maps : ASR COTTAGE vilagam, sahayanagar, pallapallam, Tamil Nadu 629159 094434 79085 Google maps : https://maps.google.com/?cid=17038636746079986055&hl=en&gl=in
0 Comments
Thank you