♥படிப்பு வராவிட்டால் என்ன!
♥எங்கள் கிராமத்தில், நண்பர்கள் மூவர், பிளஸ் 2வில் தேர்ச்சி பெறவில்லை; அதனால், இம்மூவருக்கும் அவரவர் வீடுகளில் தண்டச்சோறு, உருப்படாதவன், விளங்காதவன் என்று ஏகப்பட்ட பட்டப் பெயர்கள். ஊர்க்காரர்களும் இவர்களை மும்மூர்த்திகள் என்றே கூப்பிடுவர். ஆனால், ஊரில் எந்தவொரு காரியமானாலும் மூவரும் முதல் ஆளாக நின்று உதவுவர்.
♥ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், சொந்த வீடு கட்டி, எங்கள் ஊருக்கு குடி வந்தார். வழக்கம்போல் இந்த மூவரும் முன்னின்று, இவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து, ஆசிரியரின் மனதில் இடம்பிடித்தனர். அந்த ஆசிரியர், இவர்களை திருத்த, தன் கைக் காசை போட்டு, காய்கறி வாங்கி வரச்செய்து, குறைந்த விலையில் விற்கும்படி சொன்னார். அத்துடன், காலையில், வீடு வீடாக பால் பாக்கெட் மற்றும் பேப்பர் போடும் வேலைகளையும் செய்யச் சொன்னார்.
♥பின், தன் வீட்டின் முன் பகுதியில் கடை வைத்து கொடுத்து, டீ, வடை, பஜ்ஜி போட்டு விற்கச் சொன்னார். அவரது சொல் கேட்டு, மூவரும் நன்கு உழைக்க, அவர்களது பெயரிலேயே வங்கிக் கணக்கு ஆரம்பித்து, வங்கியில் கடன் பெற வைத்து, தனித்தனியே பிரித்துக் கொடுத்து, சுயதொழில் செய்ய வைத்தார்.
♥இன்று, மூவருமே நல்ல நிலையில் இருக்கின்றனர். மூவருக்கும் திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன.
நல்ல வழிகாட்டி இருந்தால், வாழ்க்கை பாதையும் சீராக அமையும் என்பது உண்மை தானே!
— சரவணம் பிள்ளை, சென்னை.
நல்ல வழிகாட்டி இருந்தால், வாழ்க்கை பாதையும் சீராக அமையும் என்பது உண்மை தானே!
— சரவணம் பிள்ளை, சென்னை.
0 Comments
Thank you