HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மகளிர்_குழு_என்ற_மரணக்குழு

#மகளிர்_குழு_என்ற_மரணக்குழு

( #மைக்ரோ_பைனான்ஸ் ) 

மகளிர் குழு என்னும் பெயரில், 
கந்து வட்டி கும்பலிடம் 
சிக்கி தடம் மாறும் குடும்ப பெண்கள்.

(நமது ஊரில் நடந்து கொண்டுள்ள
உண்மை நிகழ்வு 
5 நிமிடம் பொறுமையாக படிக்கவும்)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 
மற்றும் 
சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலில் 
ஈடுபடும் பெண்களை குறிவைத்து

தனியார் நிதி நிறுவனம் என்னும்,
(கிராம வெளிச்சம், உஜ்ஜீவன்,  L&T, கிராம விடியல், ஆசிவாதம், சூர்யா டே மற்றும் பல)
கந்து வட்டி கும்பல்கள்.

மகளிர் குழு என10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா
 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது.

அந்த தொகை 52 வாரத்திற்க்கு
அசலும் வட்டியும் சேர்த்து 
வாரம் ரூ625 கட்ட வைக்கிறார்கள்.

( 52 வாரம் × வாரம் 625 ரூபாய் = 32,500 ) 
(அசல் 20,000 +வட்டி 12,500 ரூபாய் = 32,500 )

10 பேரில் யாரவது 
ஒருவர் வீட்டில் சாவு விழுந்து 
இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும்..

இல்லையெனில் 
மீதம் உள்ள 9 பேரும் அந்த 
ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும்,

இது துவக்கம்.

20,000 கட்டி முடித்த உடன் 40,000 என 
கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது....
40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு 
வாரம் 490 வீதம் 
கட்ட வேண்டும்....

ஒரு நாளைக்கு 100,150  ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும பெண் வாரம் 600 ரூபாய் 
கடன் கட்ட 
நிர்பந்திக்கப்படுகிறார்...

கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு 
செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை...

ஆனால்,
கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்...???

வேலை இல்லாத வாரங்களிலும்,
பண்டிகை, விடுமுறை
வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும்.இல்லையெனில் அவர்களை இரவு பகல் பார்க்காமல் வீட்டு வாசலில் நின்று அசிங்கமாக பேசுவார்கள்.
(கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன் 
என்றால் போய் விடுவான்)

இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும்,
என்று அக்கம் பக்கம்
உள்ளவர்களிடமும்,
தெரிந்தவர்களிடமும்
கடன் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், 
வேறு 10 பெண்களுடன்
சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்.

எனக்கு தெரிந்த வரையில் 2,3 நிதி நிறுவனங்களில் 
20,000
40,000
என 1 லட்சம் வரை 
ஒரு பெண் கடன் பெறுகிறாள்.

வாங்கிய கடனுக்கு..
1வாரத்திற்க்கு,
1 குழுவிற்க்கு ரூ 600 வீதம்...
3 குழுவிற்க்கு 
1,800 முதல்
2,000 ரூபாய் வரை
ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப்
பட்டுள்ளார்கள்.....

விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000
எப்படி கட்ட முடியும்....???

குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும்...
பிச்சை எடுத்தும்
பணம் கட்டுகிறார்கள்...

பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து
அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று
கண்டபடி திட்டுகிறார்கள்...

(மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும்
சம்பவங்கள்....)

எத்தனை நாளைக்கு 
இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது,
திட்டுவாங்குவது என
நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள்,
எடுக்கும் முடிவு
விபரீதமாக மாறுகிறது...

அந்த பெண்ணுக்கு  நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது

சில பெண்கள் 
தற்கொலை செய்ய துணிகிறார்கள்,

சிலர் குழந்தைகளுக்காக தடம் மாற துணிகிறார்கள்

அந்த குழுவில் 
உள்ள 10 பெண்களில் ஒருவர், 

அல்லது  வேறு யாராவது ஒருபெண் 
அவர்களுக்கு தவறான வழி காட்டுகிறார்கள்.

ஆம் அவள் பணத்திற்க்காக  தன்னையே விற்க கூடிய சூழ்நிலையில்

தவறான வழியில் பணம் சம்பாதிக்க தன்னை தயார்ப்படுத்தி 
கொண்டு தடம் மாற்றப்படுகிறார்.

நான் மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை 
சுற்றி தினமும் நடக்கும்  உண்மையே.

யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை.

நம் ஊரில் நம் கண் முன்னேலேயே
பல பெண்கள் தவறான 
பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள்.

இந்த அவலம் நாள் தோறும் 
அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது.

பெரியோர்கள் 
இந்த விசயத்தை முன்னெடுத்து,

நமது  
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 

நம் பெண்கள் காப்பற்ற வேண்டும் 
என கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments