தன் மனைவியின் பிறந்தநாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான்.
முதலில் காரின் சாவியையும்,
பின்னர்,
அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவளை ஆரத் தழுவினான்.
பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்துக்கொள்வதாகவும்,
அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்றுவரலாம் என்றும் கூறினான்.
அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் புதிய காரை ஓட்டிச் சென்றாள்.
ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளாகவே,
சாலையை இரண்டாக வகுக்கும் நடுப்பகுதியில் காரை மோதிவிட்டாள்.
அவளுக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகிவிட்டது.
குற்ற உணர்வு அவளைப் பற்றிக்கொண்டது.
அவரிடம் என்ன சொல்வது?
அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார்? போன்ற கவலைகள் அவளை மொய்த்தன.
விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது.
காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா? என்று கேட்டார்.
நடுங்கும் கைகளுடன் தன் கணவர் கொடுத்த சிறு பையைத் அவள் திறந்தாள்.
கண்களில் கண்ணீர் தாரைத்தாரையாக ஓடிக்கொண்டிருக்க,
ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள்.
அதன்மீது
அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக்காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில்,
என் அன்பே!
ஒருவேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்,
இதை நினைவில் வைத்துக்கொள்.
நான் நேசிப்பது உன்னைத்தான்,
காரை அல்ல.
அன்புடன்! என்று எழுதப்பட்டிருந்தது.
பொருட்களை நேசிக்க வேண்டும்.
மக்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றில்லாமல்,
மக்களை நேசிக்க வேண்டும்.
பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
0 Comments
Thank you