ஒரு #பெண்ணின்_மனக்குமுறல்😭
அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்..!!
சகோதரனாய் பளகினேன்
சங்கடமாய் தொட்டான்...!!!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் தொட்டான்...!!!
உறவுகள் அணைத்தும்
உறவாடவே அலைகிறார்கள்..!!!
பாதுகாப்பு தேடி பாடசாலை
சென்றேன் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்..!!!
நட்புக்கரமொன்று நன்பனாய் தலைகோதி
தூங்கேன்றான் மரந்த மனம் மருண்டு
சுருண்டு தூங்கையிலே கைபேசியில்
படமெடுத்தான் அவனும் ஆண்தானே....!!!
கதறி அழுது கடவுளிடம் சென்றேன்
ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன்
துணையென்றான் பூசாரியான்..!!!
அலறி ஓடுகிறேன் எங்கே போவேன்
சமத்துவம் வந்ததெனெ சத்தமாய்
சத்தமாய் கூறுகின்றனர்...!!!
பெண்ணை பெண்ணாக பார்க்காமல்
மனிதராய் பார்த்து பளகலாமே....!!!
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ...!!!
0 Comments
Thank you