♥வீட்டில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?
♥ஒரு குடும்பம் செழித்து மேன்மை அடைய, அந்த வீட்டில் வசிக்கும் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
♥காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது.
♥சாமி படங்களுடன், நமது முன்னோர்களின் படங்களையும் சேர்த்து வைக்கக்கூடாது.
♥வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக்கூடாது.
♥தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது.
♥இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.
♥குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.
♥வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம், தர்மம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல.
♥நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
♥பூஜையறையில், அல்லது சாமி படங்களில் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது.
♥நில வாசற்படியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
♥காலையில் பெண்கள் எழுந்தவுடன் நில வாசற்படியை தண்ணீர் ஊற்றி அல்லது ஈரத்துணியால் துடைத்து, சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும்.
♥நம் வீட்டு வாசற்படியின் முன்னால் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீரூற்றி அதில் மலர்களை பறித்து வைப்பது நல்லது. அந்த பாத்திரத்தில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்குள் நல்ல சக்தியை இழுக்கும் தன்மையை கொண்டது.
♥கண்ணாடி பாத்திரத்தில் உள்ள நீரையும், மலரையும் தினமும் மாற்ற வேண்டும்.
♥நம் வீட்டு வாசலில் லட்சுமி புகைப்படம் இருக்குமேயானால் காலணிகளை வாசலிலேயே கழட்டி விட்டு வரவேண்டும்.
♥கும்ப கலச படத்தினை நம் வீட்டு வாசலில் வைத்து இருந்தால் நோய் நொடிகள் நம் வீட்டை அண்டாது என்பது ஐதீகம்.
♥நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதீகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும், கதவினை அடைப்பதும் மிகவும் நல்லது.
♥கிரகலட்சுமி வாசற்படியில் வாசம் செய்கின்றாள். நில வாசற்படியில் நின்று கொண்டு தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசுவது, நகம் கடிப்பது இப்படி தவறான விஷயங்களை செய்யக்கூடாது.
♥மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் ஆணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது.
#விளக்கேற்றியபின்_என்ன #செய்யக்கூடாது?
♥மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
♥காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புற கதவை சாத்திவிட வேண்டும்.
♥கொல்லைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
♥விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
♥விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.
♥வீட்டை பெருக்கக்கூடாது.
♥சுமங்கலிப்பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது.
♥விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக்கூடாது.
♥விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக்கூடாது.
♥விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக்கூடாது.
♥விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
0 Comments
Thank you