♥வீழ்வதற்கல்ல!
♥நினைப்பது போல்
வாய்ப்பதில்லை வாழ்க்கை
வாய்ப்பதுவும் மனம்
தூய்ப்பது போல் இருப்பதில்லை!
♥முயற்சியில்
முட்டுக்கட்டைகள்
தட்டுப்படவே செய்யும்
காலம் நமக்கு
பசுவைத்தான் தந்திருக்கிறது
நெய் பெறும் முயற்சியை
நாம் தான் துவங்க வேண்டும்!
♥பால பருவத்தில்
எத்தனையோ முறை
வீழ்ந்து எழுகிறோம்
அப்போதெல்லாம்
அச்சமும் அவநம்பிக்கையும்
சோர்வும் விரக்தியும்
ஆட்கொண்டதில்லை நம்மை!
♥விவேகத்துடன்
அழுத்தமாக நாம்
வைக்கும் அடியில்
சறுக்கல்கள் நிகழ்வதில்லை!
துணிவுடன் நம்பிக்கையாய்
சவால்களை சந்திக்கையில்
தோல்விகள் கூடத் துவண்டுவிடும்!
♥வாழ்க்கையில் வீழ்வது
நாம் அடையப்போகும்
வெற்றியை
விளக்கிச் சொல்லவே!
♥விழுவோம் - இனி
எழுச்சியின் சூத்திரம் கற்க
எழுவோம் - இனி
விழும் காரணிகளை
வெற்றியின் படிகளாக்க!
♥செல்லம் ரகு, திருப்பூர்
0 Comments
Thank you