♥வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்ன செய்ய வேண்டும்?
♥வாழ்வில் முன்னேறும்போது நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்.
♥செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டால் தளர்ந்துவிடாதீர்கள். எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம்.
♥எப்போதும் உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். மற்றவர்கள் கூறுவதை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
♥நீங்களே சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவரை உங்கள் பெற்றோர்கள் முடிவெடுத்து இருப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். இதுதான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம்.
♥இந்த வேலையை என்னால் செய்ய முடியவில்லை என எண்ணாதீர்கள். இன்று செய்ய முடியாமல் போகலாம். ஆனால், நாளை நிச்சயமாக வேலையை உங்களால் செய்ய முடியும்.
♥உங்களை பிடிக்காத, உங்களை கவிழ்க்கும் வேலைகளை செய்யும் நபர்களை சமாளிக்கும் தந்திரங்களை கற்றுக் கொண்டு அதனை செயல்படுத்துங்கள்.
♥எப்போதும் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யோசிக்காமல் பேசும் சில வார்த்தைகள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம்.
♥உங்கள் லட்சியத்தை எந்த சூழ்நிலையிலும்; விட்டுக் கொடுக்காதீர்கள். இன்று வெற்றிகரமான நபர்களாக இருப்பவர்கள் எல்லாம், தங்கள் குறிக்கோளை விட்டுக் கொடுக்காமல் உழைத்தவர்கள்தான்.
♥நம்மை விட வயதில் மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரையை உதாசினப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அனுபவத்தைவிட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது.
♥வாழ்க்கையில் முன்னேறும்போது தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும். 'தோல்விதான் வெற்றியின் முதல் படி".
♥தோல்விகளை சந்திக்க சந்திக்க அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும்.
0 Comments
Thank you