♥காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?
காலை உணவின் முக்கியத்துவம் !!
♥உணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் உணவே அடிப்படை.
♥உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட உணவை நாம் சரியான நேரத்திலும், ஆரோக்கியமான முறையிலும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
♥ஒருவர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :
♥ காலை உணவை தவிர்ப்பதால் சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
♥ காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்கு தேவையான சக்தியையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் செயல்பாட்டை குறைத்து விடுகிறது.
♥காலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது.
♥ மதிய உணவிலும், இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்தின் அளவு குறைந்திருந்தால் பிரச்சனை இருக்காது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.
♥காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
♥காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும்.
♥காலை உணவை தவிர்த்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து, செயல்பாட்டை குறைத்து விடுகிறது.
♥காலை உணவை தவிர்த்தாலோ அல்லது சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
♥காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
♥காலை நேரத்தில் பணிக்கு செல்லும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
0 Comments
Thank you