♥வரதட்சணை கேட்டும்.. சின்னவீடு வச்சும். அடித்து உதைத்து எரித்து ... கொடுமை செய்து மனைவியை கொன்றால் கூட ரெண்டாவது திருமணம் நடந்துவிடும், ஆண்களுக்கு. முன்னரை விட அதிக வரதட்சணையும் அழகான பெண்ணும் கிடைத்து விடும்.
♥ஆனால் எந்த தவறுமே செய்யாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் மணமகனை இழந்த பெண்ணிற்கு திருமணமே நடக்காது, ராசி இல்லாதவள் என்ற பெயர் மட்டுமே கிடைக்கும். பிறந்த வீடும் சரி... ஊரும் சரி... அவளை ராசியில்லாதவள் என்றே ஒதுக்கிவிடும்... இரண்டாம் தாரமாக கூட ஏற்க தயங்குவார்கள்...
♥இதை விட மோசமான பயங்கரம்... பெண் புகுந்தவீட்டிற்கு வந்து சில மாதங்களுக்குள் யாராவது உடல்நிலை மோசமாகியோ.. எப்படியோ.. உயிரிழந்துவிட்டாள்... அவ்வளவுதான்... இவள் வந்தநேரம் தான் உயிர் போய்விட்டது என்று அவளை உயிருடனேயே வதைத்துவிடுவர்...
♥இப்படி பெண்களை வதைப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பது புரிந்து கொள்ளமுடியாத வேதனையான உண்மை.
♥இதுதான் 'கசப்பான உண்மை'
உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் இந்த கொடூர வலி.
0 Comments
Thank you