♥மரணத்தின் ஒத்திகை
♥எங்கோ
யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
♥எனக்கு
மனைவியாக வந்த பின்பு
♥அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்
♥இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
♥ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
♥காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
♥இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்
♥மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்
♥சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
♥ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்
♥பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
♥அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்
♥ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
♥இப்போது
அவள் அருகில் நான்
♥கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்
♥வலியால்
அவள் துடிப்பதை பார்த்து
♥என்னால்
தாங்க முடியவில்லை
♥அழ வேண்டும் என்றும்
நான் நினைக்கவே நினைக்கவில்லை
♥ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
♥சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது
♥அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது
♥பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்
♥வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்
♥எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது
♥நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்
♥ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்
♥ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்
♥நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
♥அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்
♥மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
0 Comments
Thank you