♥அன்று விடுமுறை நாள்.
விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் இருந்தால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே.
♥யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே நடந்தது.
♥நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய்.
♥நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள்.
♥என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய்.
♥என்னை தன் நெஞ்சில் போட்டு தாங்கியவர் என்றாள் மகள்.
♥செல்ல சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.
♥என் தந்தை தான் பாசக்காரர் என்னை அடிக்கவே மாட்டார் என்றாள் தாய்.
♥இல்லை இல்லை... என் தந்தை தான் பாசக்காரர் மற்றவர்கள் என்னை அதட்டக் கூட விடமாட்டார். என் தந்தை உங்களை அடிப்பது தெரிந்து மௌனமாக இருக்கிறாரே என் தாத்தா..
♥அப்போ என் தந்தை தானே பாசக்காரர் என்றாள் மகள் விளையாட்டாக.
♥இதை கேட்டுக்கொண்டிருந்த தந்தைக்கு தூக்கிவாரிப் போட்டது.
♥தான் தன் மகளை நேசிப்பது போல் தானே தன் மனைவியையும் அவரின் தந்தை நேசித்திருப்பார் என்று உணர்ந்தார்.
♥மகளின் செல்ல சண்டை தந்தைக்கு பாடம் புகட்டியது.
0 Comments
Thank you