ஆணுக்கும் வலிகள் உண்டு
பெண்ணாக பிறந்ததால் நீ மட்டும் தான் வலிகளில் தலையணை நனைக்கிறாய் என்றல்லா...
அவனுக்கும் வலிகள் உண்டு அதை மறைத்து கொள்ள அவனிடமும் தலையணை உண்டு...
ஆண் என்ற காரணத்தினால் மட்டுமே அவன் பிறரின் முன்னிலையில் கண்ணீர் விடுவதில்லை..
வலிகளின் மதிப்பு ஒன்றே வெளி கொணரும் விதங்கள் மட்டுமே வெவ்வேறு.....
அவன் காதல் மறுக்க படும் போது அவனும் கண்ணீர் விடுவான்..
உண்மையாய் அவளை நேசித்த ஆண்மகன்.....
தற்குரியாய் திரிந்தவன் தன் தந்தை இறப்பில் உணர்வான் உயிரின் வலி...
தனிமையில் கண்ணீர் வடிப்பான் எவ்வாறு தன் தங்கை, தாயை குறையில்லாமல் வாழவைப்பதென்று...
அவன் கண்ணீர் சிந்துவதில்லை
ஆனால் அவனுக்கும் உணர்ச்சிகள் உண்டு...
அவனுக்குள்ளும் ஆயிரமாயிரம் வலிகள் உண்டு சொல்ல முடியாமல்...
ஒருபோதும் அதை அவன் கண்ணீரால் வெளிப்படுத்துவதில்லை...
தாயின் கண்ணீர் துடைக்க அவன் கண்ணீர் மறைக்கிறான்...
சகோதரிகள் கண்ணீர் சிந்தாமல் வாழ அவன் கண்ணீர் நிறுத்துகிறான்.. ..
மனைவியை தாயாய் அரவணைக்க அவன் கண்ணீரை முற்றிலும் ஒதுக்குகிறான்....
தானும் கலங்கினாள் தன்னை சுற்றி உள்ள உயிர்களின் கண்ணீர் துடைக்க கரமின்றி போய்விடுமே என நினைத்தே அவன் கண்களின் கண்ணீர் மொத்தமும் தனக்குளே ஒளிக்கிறான்...
அவனுக்குள்ளும் மன போராட்டம் உண்டு.. அவனுள்ளும் மௌனமான சித்ரவதையான சிந்தனை உண்டு..
எத்துணை முறை உடைந்தாலும் மீண்டும் விடியலில் சாதாரணமாய் இருக்கிறான்....
மீசை முறுக்கி வெளியில் சிரித்துக்கொண்டே உள்ளுக்குள் புழுங்குகிறான் சில நேரங்களில்..
அவனின் கண்ணீர் தண்ணீரில் வாழும் மீனின் அழுகை போன்றது...
யாரும் அறிவதில்லை...
பெண்ணியம் பேசும் பெண்களே ஒருமுறை அவன் வலிகள் உன்னிடத்தில் உடைத்து சொல்லி அவனை அழவை அதுவும் பெண்ணியம் தான் உனக்கும் தந்தை, சகோதரன், கணவன், நண்பன் என்று
வலிகள் மறைத்து வாழும் ஆண்கள் உண்டு ...
பெண்கள் ஆண்கள் மீது உண்மையான காதல் இருந்தால் அழ வைக்க மாட்டாள்..
அவன் கண்ணீரின் வலி எதிலும் வரையறுக்க பட முடியா ஒன்று...
பெண்கள் ஆண்களை அழ வைக்க வேண்டாம்.அவன் முதுமை காலம் வரை உன்னோடு வாழ்வான் சாகும் வரை...
0 Comments
Thank you