♥அம்மா – ஒரு பக்க கதை
♥ரகு, உன் புது வீடு ரொம்ப நல்லா இருக்கே.
ஆமாம். என் வீட்டை பார்த்து பார்த்து வாஸ்துபடி கட்டியிருக்கேன். தென் கிழக்கிலே சமையல் கூடம், தென்மேற்கிலே படுக்கை அறை, வட கிழக்கிலே பூஜை அறை.
அப்படியா இது என்ன புது வீட்டிலே பல்லி, இரண்டு, மூணு கரப்பான்பூச்சி, மீன் தொட்டி, வாசலிலே நாய்.
♥இது கூட வாஸ்துபடி இருக்கட்டும்னு வைச்சிருக்கேன். பல்லி இருந்தா பூச்சியை சாப்பிட்டுட்டு வியாதி பரவாம தடுக்கும் கரப்பான் இருந்தா செல்வம் சேரும். மீன் தொட்டி வீட்டிலே இருந்தா நல்ல உயிரோட்டம் இருக்கும். நாய் இருந்தா திருட்டு பயம் இல்லாம இருக்கும்.,
♥இதெல்லாம் சரி உங்கம்மா எங்கே?
அவங்க கிராமத்திலே இருக்காங்க.
ஏம்பா, அம்மாவை வீட்டிலே தங்க வைச்சு நல்லபடியா கவனித்து கொண்டால் வாஸ்துபடி புண்ணியம் கிடைக்கும்ன்னு யாரும் உனக்கு சொல்லவில்லையா? என்று கேட்கும்போது ரகு குற்ற உணர்வு மேலிட தலை குனிந்து கொள்கிறான்.
- ஜி.கண்ணன்
0 Comments
Thank you