HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மக்களின் அறியாமை என்று நீங்கும் பெண்களின் வேதனை என்று குறையும்

♥மக்களின் அறியாமை என்று நீங்கும்  
பெண்களின் வேதனை என்று குறையும்
  
♥புருஷன் கூட வாழுற நானே ரூ.500 க்கு  தான் புடவை எடுக்குறேன்.புருஷன் கூட வாழாத உனக்கு எதுக்கு 1000 ரூபாய்ல புடவை?

♥புருஷன் கூட வாழுற நானே வாரம் ஒரு நாள் தான் பூ வாங்கி வக்குறேன்.வாழாத உனக்கு  டெய்லி பூ எதுக்கு?யாருக்காக தான் வக்குறீயோ?

♥இப்பிடி வக்கிர வார்த்தைகளை பெரும்பாலும் உதிர்ப்பது நாம் தான் பெண்களே.சாட்சாத் நாம் தான் .
கோடி எண்ணிக்கையில் வாழும்  பெண்களில் இலட்சங்களில் பெண்கள் தான் முற்போக்கு சிந்தனையோடு தங்களுக்கு பிடித்த வாழ்க்கை, சுதந்திரமான அறிவு என்று  ஒரு புரிதலுடன் அழகாக தங்கள் வாழ்வை வாழ்கிறார்கள்.மீதம் உள்ள பெண்களில் மற்றவர்களின் நிலை தான் மேற்கண்ட புரிதல்கள்.

♥அப்போது என்ன? கணவன் இருந்தால் பூ வைத்துக் கொள்ளலாம்.காஸ்ட்லி புடவைக் கட்டி கொள்ளலாம்.
ஆனால் கணவன் இல்லாமல் வாழும் ஒருவர் இதை எல்லாம் தொடக் கூடக் கூடாதா?

♥அவர் விட்டு ஓடி இருக்கலாம், பிரிந்துச் சென்று இருக்கலாம்  (அ) ஏதோ விபத்தில் மரணம் அடைந்த ஒருவராய் கூட இருக்கலாம். ஆனால் அந்த ஒருவர் ஏதோ காரணத்திற்காக இல்லாமல் போனால் நாமும் நம் அடையாளங்களை ஆசைகளை விருப்பங்களை காணாமல் தொலைத்து விட வேண்டும். இல்லையா?  தொலைத்து விட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாமே நம்மை அறியாமல் மற்றவர்களை வசைப்பாடி அவர்களின் மனதைக் குத்தி கூறுப் போடுகிறோம்.

♥ஆண்களிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டுப் போராடுகிறோம். என் சுதந்திரம் எனக்கு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படைப் புரிதல் என்ன? ஒரு அடிப்படை அறிவோடு நாம் முதலில் தெளிவாக இருக்கிறோமா?

♥திருமணம் என்ற பந்தத்திலிருந்தா? நமக்கு பூ வைக்க, பொட்டு வைக்க, நல்ல உடை உடுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது? யோசித்துப் பாருங்கள். நம் சிறு வயது முதலே நாம் பொட்டுகளை விதவிதமாய் வைக்கின்றோம். நல்ல ஆடைகளை அணிந்து வருகிறோம். விரும்பிய வாசனை உள்ள பூக்களை சூடிக்கொள்கிறோம். இப்பிடி சிறு வயது முதல் நமக்கான விருப்பங்களாய் இருக்கும் ஒன்று கணவன் வந்த பிறகு எப்பிடி அவருக்காய் மாறுகிறது? அவர் இல்லையென்றாலும் எப்பிடி மாறுகிறது?

♥"இந்தா மல்லி பூ வச்சிக்க , உன் புருஷன் பாரு எப்பிடி மயங்கி வருவான்னு " மச்சி பூ வாங்கிட்டு போடா , உன் மனைவி கோவம் போய் ரிலாக்ஸ் ஆயிடுவாங்க" இப்படி பல வசனங்கள் கேட்காத காதுகள் இருக்காது. என்னைக் கேட்டா இதெல்லாம் புரிதலே இல்லாத வசனங்கள் என்று தான் தோணும்.

♥"நாம் பெரும்பாலும் வாசனையுள்ள பூக்களை தான் சூடிக் கொள்வோம்; அதற்கு காரணம் யாரையும் மயக்குவதற்கு அல்ல" ஒவ்வொரு வாசனைப் பூவிற்கு என்று ஒரு மருத்துவப் பலன் உள்ளது. அதைச் சூடும் போது உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. அமைதியுள்ள இடத்தில் மகிழ்ச்சி தன்னாலயே பிறக்கிறது. அவ்வளவு தான் விஷயம்.

♥ஆனால் திருமணத்திற்கு பிறகு அவள் சுமங்கலி ஆகிவிட்டாள்."சுமங்கலியின் அடையாளங்கள் சிவப்பு கலர் பொட்டு, நெற்றியில் குங்குமம், தலையில் பூ"  இது இல்லாமல் அவள் இருக்கக்கூடாது.

♥நிச்சயம் பெண்கள் இதை விரும்பினால் அணியலாம் ;  அணிவது அவரவர் விருப்பம் ;  அதைக்  குறை சொல்வது என் நோக்கமல்ல ;  அது என்ன சிவப்புக் கலரில் பொட்டு ? சிவப்பு குங்குமம்? இதுவும் அறிவியல் சார்ந்த ஒன்று தான்.
நம் சார்ந்த விஷயங்களை பெண்களே நாம் தான் தேடித் தெரிந்துக் கொள்ள வேண்டும்.போய் தேடுங்கள் என்ன காரணம் என்று?புரியும்.

♥அர்த்தமற்று எனக்கு புருஷன் இருக்கிறான் நான் வைத்துக் கொள்கிறேன் ; உனக்கு தகுதியில்லை வைத்துக் கொள்ள என்று மார்த்தட்டக் கூடாது. நாமே ஒருவரின் உணர்வுகளோடு மனிதநேயமற்று விளையாடக்கூடாது. 

♥பிறந்த முதல் நமக்கான ஒன்றை இறக்கும் வரை நமக்கு தொடர விருப்பம் எனில் தயங்காமல் செய்யுங்கள்.

♥கணவன் இறந்த பின்பு பல காலமாய் பெண்கள் பொட்டு, பூ  வைப்பதை தவிர்த்து வந்தனர்; ஆனால் தற்போது பல பெண்கள் சின்ன சைஸில் உள்ள கருப்பு கலர் பொட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்; 
அவர்கள் டிசைன் "கருப்பு வண்ணம் என்பது அமங்கலிகானதாம்". 
சோ கணவன் இழந்தப் பெண்கள் அமங்கலிகள் இங்கே. என்ன கொடுமை இது? அப்பிடியும் மீறி சில பெண்கள் சிவப்பு கலரில் பயன்படுத்தினாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் அவரின் மீது விழுமே ஒரு  முகச்சுழிப்பு பார்வை .என்னவென்று சொல்வது இந்த மனநிலைகளைக் கண்டு?

♥கணவரோடு பிரிந்து வாழும் பெண்களின் நிலைமை இதை விட மோசம் என்றே கூறலாம் "காலை அவர்கள் வெளி சொல்லும் நேரம் முதல் மாலை வீடு வரும் நேரம் வரை மணி கணக்கெடுக்கப்படும்; 
அவள் வைக்கும் பூவின் முழமும் அளவெடுக்கப்படும்; 
ஒருத் தொலைப்பேசி அழைப்பும் நெற்றிச் சுருக்கத்தோடு கவனிக்கப்படும்;
இதைச் செய்ய புரளிகள் பேச யாரும் வெளியூரில் இருந்து வரமாட்டார்கள்.
நம்மைச் சுற்றிய உறவுகளே தான் இதைச் செய்வார்கள். அது தோழியாக இருக்கலாம் ; மாமி , அத்தை , பெரியம்மா, சித்தி ,தங்கை , பக்கத்து வீட்டுகாரங்க என யாராவது கூட இருக்கலாம்.

♥இரண்டு நாள் வெளியூர் பயணம் சென்றால் கூட விசாரணைகள் கமிட்டி கூடி அனைவருக்கும் செய்திகள் கடத்தப்படும். எந்தக்காலத்திலும் மாறாமல் கட்டுக்கோப்பு என்ற பெயரில் நாம்  வாழ நினைத்து அடுத்தவர் வாழ்வில் ஏற்பட்ட புண்ணை சுரண்டி விடுவதில் நாமே தான் முதலாய் முனைப்புக் காட்டுக்கிறோம்.

♥"விட்டு ஓடிய ஒருவருக்காக ஒருப் பெண் நல்ல உடை  அணியக்கூடாது ; பூ வைக்கக் கூடாது; பவுடர் பூசக் கூடாது என்று அவரை வாட்டினால் " நம்மை விட மூளை மங்கியவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

♥வாழ்வது சுதந்திரம்; சுயத்தன்மையுடன் வாழ்வது பேரின்பம். வாழ்ந்து தான் பாருங்களேன்.

♥அதைவிடுத்து  பேசி பேசியே ஒரு வட்டம்  போட்டு அதற்குள் தானும் சுருங்கி, அடுத்தவரின் உணர்வுகளையும் சுருக்கி ஏன் ஒரு மந்த நிலையில் நாமே வாழ வேண்டும்?

♥ஒரு ஆணோ பெண்ணோ நிச்சயம் அவர்கள் ஒரு நாள் தந்தையாய் தாயாய் மாறும் காலத்தில் தன் மகளுக்கோ ,மாமனாராய் மாமியாராய் மாறும் காலத்தில் தன் மருமகளுக்கோ "எந்த சூழ்நிலையிலும் அவளின் விருப்பங்களின் தேவைகளில் கட்டுபாட்டை இடுவதை விடுங்கள்; சிறு வயது முதல் அவளுக்கான உரிமை அவளின் பூவும் பொட்டும் .

♥ஊருக்காக ஊருக்காக என்று அர்த்தமற்று இரக்கமற்று ஒருவர் அடிப்படை  உரிமைகளை கட்டுப்படுத்துவதோ , அதை வீணாக பிடித்து பேசிக் கொண்டிருப்பதிலோ எந்த பயனும் இல்லை.

♥குங்குமம் அணிய ஆசைப்படும் அவளின் நெற்றிக்கு விபூதி தான் பூச வேண்டும் என்று சட்டம் போடாதீர்கள்.
மாறுங்கள் ; இல்லையேல் மாற்றம் வேண்டுபவரை வாழ விடுங்கள்.

Post a Comment

0 Comments