♥காப்பி போடுவது எப்படி? – ஒரு பக்க கதை
♥சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!” என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான்.
ஆபிசில் இருப்புக் கொள்ளலை.
புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள்.
♥ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது.
நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது.
♥மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது அம்மா விட்டில் போய் நின்றான்
‘மாப்பிள்ளை என்ன தனியா வந்திருக்காரு?’ என்று மாமியார் பதறியதைப் பார்த்ததும் அவள் இங்கு வரவில்லை என்று புரிந்தது. அசடு வழிந்தபடி சமாளித்து விட்டு திரும்பினான்.
♥வீடு பூட்டிதான் கிடந்தது. ‘சனியன், எங்கே போனா? சேச்சே…மறுபடியும் சனியன் வேணாம்’
அடுத்த தெருவில் அண்ணனுடன் அம்மா இருக்கிறாள்,அங்கே போயி அம்மா கையில காபி குடிச்சிட்டு வரலாம்.
♥அம்மா வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே பல் இளிக்க வரவேற்றாள். அவன் அருமை மனைவி.
என்னமோ அம்மா விட்டுக்குப் போறேன்னு எஸ்.எம்.எஸ். அனுப்பினே?
♥ஆமா…எங்க ஆம்மா வீடுன்னு நெனைச்சீங்களா. உங்க அம்மா வீடுதான் அத்தை கிட்ட காபி போட கத்துக்கிட்டேன்’ என்றாள் கீச்சுக் குரலில்
- வசீரகன்
0 Comments
Thank you