HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கன்னியாகுமரி

❤️
நாங்க கன்னியாகுமரி மாவட்ட காரங்க, எங்க மாவட்டத்தை பற்றி சொல்லட்டல மக்கா!
❤️
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலங்களை கொண்ட மாவட்டம்.
❤️
காலாண்டையும், அரையாண்டையும்
ஓணப்பரிட்சை கிருஸ்துமஸ் பரிட்சை
என சொல்லும் மக்களை கொண்ட மாவட்டம்.
❤️
குமரி கண்டத்தின் மிச்சத்தை, இன்றும் உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கும் மாவட்டம்.
❤️
பாரம்பரிய சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைய இருக்கும் மாவட்டம்.
❤️
சித்த வைத்தியக்கலை இன்னும் கலையாமல் இருக்கும் மாவட்டம்.
❤️
நாடன் அடி எனும் களரி ஆசான்கள் நிறைந்த மாவட்டம்.
❤️
அனைவரிடமும் ஒற்றுமையாக பழகும் மக்கள் இருப்பதால், சாதிச் சண்டைகள் இல்லாத மாவட்டம்.
❤️
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில், முதலிடத்தில் இருக்கும் மாவட்டம்.
❤️
சென்னைக்கு அடுத்தபடியாக, மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட மாவட்டம்.
❤️
இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாவட்டம்.
❤️
தமிழ்நாட்டில் படித்தவர்கள் சதவீதம் அதிகம் கொண்ட மாவட்டம்.
❤️
இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்கள் அதிகமாக உள்ள மாவட்டம்.
❤️
தமிழ்நாட்டிலேயே அதிக ஆசிரியர்களை உருவாக்கி "ஆசிரியர்கள் மாவட்டம்" என்று பெயர் பெற்ற மாவட்டம்.
❤️
கல்வி மாவட்டம் என்று சொல்லுமளவிற்கு அதிகம் கல்லூரிகளை கொண்ட மாவட்டம்,
❤️
அதிலும் சமீபத்தில் தொழில் நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனை என்று எண்ணமுடியாத அளவு பெருகிவிட்ட மாவட்டம்.
❤️
தமிழ்நாட்டின் பிற பகுதியில் பேசாத பல செந்தமிழ்ச் சொற்களை இன்றும் பேச்சு வழக்கில் கொண்ட மாவட்டம்.
❤️
வாழைப் பழத்தை சரியாக உச்சரிக்க தெரிந்த மாவட்டம்.

❤️
தமிழ்நாட்டிலேயே கங்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் எண்ணிக்கை (95%-க்கு மேல்) அதிகமாக உள்ள மாவட்டம்.
❤️
நெல்பாடங்கள் (வயல்கள்) எல்லாம் வாழைக் கிரிசியாகி, தென்னைமரம் வைத்து இப்போது கங்கிரீட் காடுகளாக மாறிவருகிறது என்றாலும் இன்னும் பசுமையாக இருக்கும் மாவட்டம்.
❤️
மொத்தமாக சொன்னால், இது ஒரு சொர்க்கம்.
❤️
#வேணாடு
#கன்னியாகுமரி
#KanyakumariTamizhan  
#kanyakumari 
#venad 
#kanyakumarians

Post a Comment

0 Comments