HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சாமி சரணம்! ஐயப்ப சரணம்!

சாமி சரணம்! ஐயப்ப சரணம்!
⭐கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து விரதமிருக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

⭐கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாளன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

⭐சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

எவ்வாறு மாலை அணிய வேண்டும்?

⭐கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை, அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைபிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.

⭐சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும்.

⭐விரதத்தைத் தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை, ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.

⭐குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம்.

⭐மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?

⭐மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

⭐விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, ஐயப்பன் பாடல்களை பாடலாம்.

⭐நாள்தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளிலும் நீராடி, பஜனை வழிபாடு செய்ய வேண்டும்.

⭐ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.

ஐயப்ப ஸ்லோகம் :

இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள் :

ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும்
சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும்
ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து,
பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.கார்த்திகை மாதம்.. ஐயப்பனுக்குரிய மாதம்...

Post a Comment

0 Comments