HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அளவும் முக்கியம்!

♥அளவும் முக்கியம்!

♥சுகாதாரமான மாதவிடாய் நாள்களுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்கள், பெரும்பாலும் அதை அளவு பார்த்து வாங்குவதில்லை. ஆடை, உள்ளாடைகளைப் போல இதிலும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்’’ 

♥சரியான அளவிலான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?
‘’பொருத்தமில்லாத அளவில் நாப்கினைப் பயன்படுத்துவதால், 80 சதவிகிதம் பெண்கள் கறைபடும் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். மாதவிடாய் நாள்களின் உதிரப்போக்குக்கு ஏற்பவும் ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்பவும் நாப்கின்கள் மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப் பல அளவுகளிலும் பேக், ஃப்ரன்ட் கவரேஜ் எனப் பல வகைகளிலும் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணும் இதில் தன் தேவை என்ன என்பதன் அடிப்படையில் நாப்கின் வாங்குவது நல்லது.

♥உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் முதல் மூன்று நாள்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த எக்ஸ்எல் சைஸ் நாப்கின்கள், 
உதிரப்போக்குக் குறையத் தொடங்கும் நான்கு, ஐந்தாவது நாள்களில் மீடியம்/லார்ஜ் சைஸ் நாப்கின்கள் எனப் பயன்படுத்தலாம். அதேபோல, மெனோபாஸை எதிர்கொள்ளும் பெண்களும் தேவையைப் பொறுத்து எக்ஸ்எல் நாப்கின்களைப் பயன்படுத்தலாம். பிரசவ நேரத்தில் அந்நாள்களின் அசௌகர்யங்களைக் கருத்தில்கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும், நீளமும் அடர்த்தியும் அதிகம்கொண்ட ‘மெட்டர்னிட்டி பேடு’ பயன்படுத்தலாம். இதை மருத்துவமனையிலேயே வழங்குவார்கள்.

♥அளவு மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம்!
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு.  ஆகவே,  அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது.

♥நாப்கினில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்!
நாப்கின் தயாரிப்பில் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல், கட்டி முதல் புற்றுநோய் வரை பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், அப்போதும்கூட பெண்கள் அதைத் தங்கள் அந்தரங்கச் சுகாதாரப் பிரச்னையாக நினைப்பார்களே தவிர, பயன்படுத்திய நாப்கினால் ஏற்பட்ட கேடு என்பதை உணர மாட்டார்கள்.

♥காட்டன் பேடுகளே சிறந்தவை!
ஒவ்வொரு பெண்ணின் உடலைப் பொறுத்தும் குறிப்பிட்ட ரக நாப்கின் ஆற்றும் வினை மாறுபடலாம். எனவே, மாதவிடாய் நாள்களில் ஒவ்வாமை, கட்டி என்று அவதிப்படும் பெண்கள், வேறு வகை நாப்கின்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம். எளிமையான காட்டன் பேடுகள், ஹெர்பல் நாப்கின்களைத் தேர்ந்தெடுக்கலாம். இன்று துணியினாலான ரெடிமேடு  நாப்கின்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியே பல மணி நேரம் செலவிட வேண்டிய பெண்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பொழுதுகளில், உதிரப்போக்குக் குறையும் நான்காவது, ஐந்தாவது நாட்களில் எல்லாம் மேற்கூறிய வகை நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.

♥சுகாதாரம் முக்கியம்!
பெண் உறுப்பில் ஈரப்பதம் தங்கினால் தொற்றுக்கு எளிதில் இலக்காகும் என்பதால் கவனம் தேவை. எந்த வகை நாப்கின்களைப் பயன்படுத்தினாலும், அதிகபட்சம் ஐந்து, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டியது அவசியம்.
மாதவிடாய் நாள்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை மெஷினில் துவைப்பதைத் தவிர்த்துக் கைகளால் நன்கு துவைத்து, வெயிலில் காயவைக்கவும். அந்நாள்களில் வேலைப்பளு, பயணங்களைக் குறைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதவிடாயின்போதும் 50 முதல் 80 மில்லி லிட்டர் உதிரப்போக்கு நிகழும். குறைவு, அதிகம் என இந்த அளவில் அதிக வித்தியாசத்தை உணரும் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்

Post a Comment

0 Comments