♥மௌனம் பேசிடும் பெண்மை !!
♥வரன் பார்த்து
வாழ்க்கை வரமாகும்
நேரத்தில் ...,
பெண்மையின் மௌனம்
'சம்மதம் '!
♥பிறந்த வீடு பிரிந்து
புகுந்த வீடு
புகும் வேளையில்...,
பெண்மையின் மௌனம்
'பிரிவு '!
♥முதன்முதலாய்
முகம் பார்த்து பேசும்
மணவாளனுக்கு .......
பதில் பேசாத ,
பெண்மையின் மௌனம்
'நாணம் '!
♥இதுவரை
பழகிடாத எதார்த்தத்தை
பிடித்தவருக்காக
ஏற்றுக்கொள்ளும்போது ,
பெண்மையின் மௌனம்
'தியாகம்' !
♥சொல்லித் தீர்த்துவிட
வேண்டிய விஷயத்தை ...,
சொல்லமுடியாமலே போன
சூழ்நிலையில் .....
பெண்மையின் மௌனம்
'கண்ணீர் '!
♥எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களான போது ,
பெண்மையின் மௌனம்
'வேதனை '!
♥ஏங்கித்தவித்த விஷயமொன்று
எதிர்பார்க்காமல் கிடைக்கும்
தருணத்தில் ...
பெண்மையின் மௌனம்
'களிப்பு '!
♥உண்மைக்கோ ,
பெண்மைக்கோ
கலங்கமென்ற
சமயத்தில் .....
பெண்மையின் மௌனம்
'கோபம் '!
♥தாவணி உடுத்திய
கன்னியவள் ...
தாய்மையென்னும் கண்ணியத்தை
உணரும் போது ....,
பெண்மையின் மௌனம்
'பேரானந்தம் '!
♥வெளிவரும் வார்த்தைகளே
அர்த்தப்ப்படுமானால் ...,
ஆயிரம் சூழ்நிலைகளில்
வெளிப்படாத .....
பெண்மையின் மௌனம்
"பொக்கிஷமே
0 Comments
Thank you