என் ஆசை காதல் கணவனுக்கு உங்கள் அன்பு காதல் மணைவி எழுதிக் கொள்வது.
நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது உங்கள் காதலை என்னிடம் தெரிவித்தீர்கள்.அதுவரையும் ஒருதலை காதலாக இருந்த காதல் இரு பக்கமும் காதல் மலர ஆரம்பித்தது.
ஐந்து வருடம் கழித்து காதல், கல்யாணத்தில் முடிந்தது.
அடுத்த வருடமே நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இருவருமே சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.வேலைப்பளு காரணமாக நீங்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தீர்கள்.உங்களிடமிருந்து நான் ஒரு சிறிய தூரத்தை உணர ஆரம்பித்தேன்.உங்களிடம் என் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது.ஆனால் நான் எதிர்பார்த்த நாளில் அது எனக்கு நீங்கள் கொடுத்ததில்லை.அந்த நேரத்தில் நான் மிகவும் மனம் உடைந்து போவேன்.ஆனால் நான் எதிர்பார்க்காத நிலையில் நீங்கள் கொடுக்கும் அந்த சிறிய பரிசு எனக்கு மிகவும் சந்தோசத்தை தந்து இருக்கிறது.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னை அன்போடு கவனித்து கொள்ளும் உங்கள் அரவணைப்பு, நான் வேலை செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் ஆசையோடு கொடுக்கும் அந்த முத்தம், நான் கோபமாக உள்ள போது என்னை கட்டியனைத்தல் இதெல்லாம் என்றுமே மறக்க
இது ஒரு அளவில்லா சந்தோஷம்.இதற்கு ஈடாக எதுவும் இருக்கமுடியாது.நமக்குள் வரும் சின்ன சின்ன சண்டைகள் பிரிவுகள் இவையெல்லாம் எனக்குள் இருக்கும் உங்கள் மீதான காதலை வலுப்படுத்திக் கொள்ள ஒரு ஆயுதமாக பயன்படுகிறது.
நாம் காதலிக்கும் போது இருவரும் எதிர்பாராமல் சந்தித்த அந்த முதல் இடம் பள்ளிகூடம் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.எனக்கு நீங்கள் கொடுத்த முதல் பரிசு ரோஜா செடி.அந்த செடியில் உள்ள ரோஜாப்பூ இன்னும் என் கூந்தலில் இருப்பது போல் ஓர் உணர்வு.
நீங்கள் வாங்கி கொடுத்த அந்த பச்சை வண்ணம் சுடிதார் நம் காதல் நினைவாக என் பீரோலில் காத்துக் கொண்டிருக்கிறது.காதலித்து ஐந்து வருடம் கல்யாணம் முடிந்து ஐந்து வருடம் பத்து வருடமாகியும் இதெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.என் ஆசை காதல் கணவனே உன்னை என்னால் யாரிடமும் விட்டு கொடுத்த பேச முடியாது.நம் முதுமை காலம் வரையிலும் என் துனையாய் இந்த காதலோடு இருப்பாய் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை
முடித்துக் கொள்கிறேன்.
0 Comments
Thank you