♥உடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி
♥தாய்மையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவைப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
♥பெற்றோர்கள், உறவினர்கள் காட்டாயத்திற்காக மட்டும் முடிவு எடுக்காமல், உங்களுடைய மனநிலை, உடல் நலம் பொறுத்தே கருத்தரிக்க திட்டமிடுங்கள்.
♥முதல் பிரசவம் என்பதால் அதை பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. மேலும் தனிக்குடும்பம் பெருகிவிட்ட நிலையில் இந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும். எனவே, கருத்தரிக்கு முன், கர்ப்ப காலங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வரும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
♥கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சந்தேகங்கள், பிரச்சனைகள் பற்றி அறிவுரை, ஆலோசனைகள் கேட்க அனுபவமிக்க ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்வது கர்ப்ப காலங்களில் வரும் ஐயங்களை சரி செய்ய உதவும்.
♥உடல்நலம் மற்றும் ஆரோகியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாட்கள் உணவில் அலட்சியம் இருந்தாலும் கருத்தரிகும் முன் சரியான உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், பெண்கள் தன் சிறு வயதிலிருந்து சத்துள்ள உணவை சாப்பிட்டு வளர்ந்தால் கர்ப்ப காலங்களில் குறைவான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
♥கருத்தரிக்க போவதற்கு முன் பெண்களுக்கு அதைப்பற்றி அதிகமான பயம் இருக்ககூடும். பயத்தை போக்குவதற்கான ஆலோசனை, மன தைரியம் தரக்கூடிய தகவல்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மேலும் ”தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தை பிறக்கும்” என்று தினமும் எண்ணுவது மூலம் ஆழ்மனதில் பாசிடிவ்வான எண்ணங்கள் வரும். அது பயத்தை போக்க உதவும்.
♥வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழல் தேவைப்படும். கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவ வேண்டும். எனவே, அதிக சத்தம், இரைச்சல் இல்லாத, அமைதியான, ஆனந்தமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். எளிதில் தொற்று மற்றும் நோய் கிருமிகள் பரவாதவாறு வீட்டை சுத்தமாக வைத்திருக்க பழக வேண்டும்.
♥பாசிடிவ்வான மனநிலையை தருகிற விஷயங்களான மெல்லிய இசை, புத்தகம், கைவினைப் பொருட்கள் செய்வது குழந்தைக்கு புத்திகூர்மையை அதிகரிக்கும்.
♥அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மன அழுத்தத்தை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பக்குவத்தையோ, சூழலையோ அவர்கள் உருவாக்க வேண்டும். அதிக வேலைபளூ இருக்ககூடாது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்ததில் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த வித பிரச்சச்னையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
♥இதற்கு இணையாக உள்ள இன்னொன்று சேமிப்பும். முன்பு போல தற்போதைய நிதி நிலை இல்லை. மருத்துவத்தில் தொட்டதற்கு எல்லாம் பணம் என்ற நிலை உருவாகிவிட்டது. மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலையை பாதுகாக்க மருத்துவ செலவுகள் நிறைய இருக்கும். அதற்கு ஏற்ப பணம் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.
♥தாய்மையை பற்றிய முழு புரிதலோடு தாய்மை அடைந்து, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்கள். சிறந்த மனிதர்களை இந்த உலகத்திற்கு கொடுக்க வழி செய்வோம்
0 Comments
Thank you