♥என் நன்பனுக்கு திருமணம். வீட்டில் மாப்பிள்ளையின் அறையில் பெண்ணின் தோழிகள் 10 பேர் அவனை பயங்கரமாக "கலாய்த்தனர்" அவன் முழிபிதுங்கி என்னை பார்த்தான். நான் அவனை மீட்கும் பொருட்டு அவர்களிடம் சென்று உங்களில் எத்தனை பேருக்கு திருமணம் ஆயிற்று என்றேன்
♥காதலித்து திருமணமும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணமும்... என்று 10 ல் 8 பேர் கூறினர். இருவர் திருமணமாகவில்லை.
♥சரி நீங்கள் 8 பேரும் உங்கள் கணவரிடம் கடைசியாக எப்போது "ஐ லவ் யூ " சொன்னீர்கள் என்று கேட்டேன். உடனே
>நான் தினமும் சொல்வேன்,
>நான் சொல்லி 3 நாள்தான் ஆகிறது,
>நான் சொல்லமாட்டேன் அவர்தான் சொல்வார்,
>அதுதான் திருமணமாச்சே இனி என்ன லவ் யூ.... என்று அவர்கள் கூச்சலிட்டனர்.
♥சரி சரி இப்போது நீங்கள் 8 பேரும் உங்கள் கணவருக்கு " ஐ லவ் யூ" என்று மெசேஜ் அனுப்புங்கள்.. யாருக்கு மகிழவான வித்தியாசமான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு பரிசு இருக்கிறது என்றேன்.
♥மெசேஜ் அனுப்பியதும் அவர்களின் கணவர்மாரிடம் இருந்து பதில் வரத்துவங்கியது)
.
♥1)பெண் -ஏண்டி லூசு இரு பிள்ளை பெத்தாச்சு இப்ப உனக்கு ரோமன்ஸ் கேக்குதா... "ஜ லவ் யூ வாம் ....
.
♥2)பெண் -இந்த மாதம் ரொம்ப செலவு இருக்குமா அடுத்த மாதம் நகை வாங்கி தறேன்னே please!!!
.
♥3)பெண் -சீரியல் பாக்காதனு சொன்னா கேக்கிறியாடி!!! இப்ப என்கிட்டயே "ஐலவ் யூ" என்கிறா..என்னாக போகுதோ...
.
♥4)பெண் -ஏண்டி இங்க நான் வேலை டென்ஷன்ல இருக்கேன் நீ காமெடி பன்றியா!!! ஏதாசும் வேலை இருந்தா பாரு.. வீட்ல சும்மா இருந்தா இப்படி தான் கண்ட கண்ட நினைப்பு வரும்....
.
♥5)பெண் -அய்யய்யோ! என்னடி ஆச்சு உனக்கு... எனக்குதான் அனுப்புனியா... இல்லை......
.
♥6)பெண் -Sorry Wrong Number!!!
( நம்ம பொண்டாட்டியாவது "ஐ லவ் யூ " சொல்றதாவது)... பேய்
.
♥7)பெண் -அடி பாவி நான் சொல்லும் போது முறைப்பா பார்ப்பாய்... இப்ப நீ சொல்றா... என்னாச்சு...
.
♥8)பெண் -தங்கம் என் செல்லம் Love U To Da Kutty....!!! சீக்கிரம் வந்துர்றன்....
.
♥8வது பெண்ணிற்குதான் பரிசு கிடைத்தது ஆனால் அவளோ பத்து பேர் மத்தியில் தன்னை கௌரவ படுத்திய கணவனின் காதலை நினைத்து விக்கி விக்கி அழுகிறாள் மற்ற தோழிகளுக்கெல்லாம் இவள் மீது பொறாமை எழுந்தது. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துகொண்டேன் என்று சொன்ன பெண் இவள்தான்.
♥நான் I Love U சொல்லமாட்டேன் அவர்தான் சொல்வார் என்று சொன்னவளும் இவள்தான். அந்த பெண்ணிற்கு மறுபடியும் ஒரு Msg வருகிறது.
♥"எங்கமா இருக்க வீட்டில நிக்கிறன் உன்னை பார்கனும் போல இருக்குடா!"
இதை படித்தவள் ஓஓஓ... என்று சத்தமாக அழ ஆரம்பித்தாள் அங்கிருந்து வேக வேகமாக தான் கணவனை காண ஓட்டம் பிடிக்கிறாள்..
.
♥காதலிக்கும் போது இருந்த அன்பும் தேடலும் கல்யாணத்திற்கு பிறகு தொலைந்துவிடுகிறது. அதற்கு காரணம் காதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவதே!
♥அதிகமான தம்பதிகள் தனக்கு ஒரு தேவை இருந்தால் மட்டுமே
I Love U என்ற வார்த்தை பயன்படுகிறது.
♥பொதுவாகவே காதல் என்றால் என்ன? ஒருவர் ஆசையை மற்றொருவர் நிறைவேற்றுவதும்தன் துணையை புரிந்துகொள்வது
ம் மட்டுமேதான் "காதல்
♥காதலிக்கும் போது மூச்சுக்கு மூச்சு ஐ லவ் யூ சொல்பவர்கள்... திருமணத்தின்பின் அதை ஒரு முறை கூட சொல்வதில்லை... என்பதுதான் காதல் இறப்பின் ஆரம்பமாகிறது.....
0 Comments
Thank you