❤மறுமணம் செயயப்போகிறீர்களா?
❤வரதட்சணை கொடுமையால் தோழியின் முதல் திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே முறிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் அவள் விரும்பியபடி வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைத திருமணம் செய்தாள்.
❤அவரும் முதல் திருமணவாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். அவரது பெற்றோர், சகோதர சகோதரிகளின் சம்மதத்துடன் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.
❤சமீபத்தில் அவளை சந்தித்து 'எப்படி இருக்கிறாய்...' என்று கேட்டேன்.
இந்த திருமணமாவது எனக்கு நிம்மதியை தரும் என்று நினைத்தேன். என் கணவருக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் உள்ளன. ஏகப்பட்ட கடன் வாங்கியதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார். மேலும், வேலைக்கும் செல்வதில்லை. வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.
❤எட்டு வயதில் ஒரு பெண்குழந்தை. நான் வேலைக்குச் சென்றுதான் குழந்தையை பராமரிக்கிறேன். அதுமட்டுமல்ல கணவனின் அக்கா மற்றும் அண்ணன்கள் 'அவன் வேலைக்குப் போக மாட்டான்; நீதான் எல்லாம் செய்யனும் என்று வற்புறுத்துகின்றனர்...' என்றாள்.
❤இதுபோன்ற ஆண்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது. ஏற்கனவே ஏமாற்றத்தோடு இன்னொரு மணவாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணுக்கு இரண்டாவது திருமணமும் இவ்வாறு அமைந்தால், அவளும் குழந்தையும் மீதிக்காலத்தை எப்படி வாழமுடியும்?
❤ஆண்களே.., உங்கள் உண்மை சுபாவத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமா..?
பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்; இனியாவது திருந்துங்கள்.
❤பெண்களே... நன்கு விசாரித்து இரண்டாவது திருமணம் செய்வது நல்லது.
♥ஆர்.எம்.எஸ்.கோவை.
0 Comments
Thank you