♥பருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்படுமா
♥பதிவுஅதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி யில்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது.
♥கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கர்ப்பக் காலத்தின் போதே ஆரோக்கிய மான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர். முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின் போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பது தான்.
♥அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
♥எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர். எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும் போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
♥ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்று தான் கூறுவார்கள் .
♥உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து
0 Comments
Thank you