♥பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்... கணவர் பெயரோடு பேஸ்புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.
♥வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்... சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறோம்!
♥நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில் உங்களை உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!
♥தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.
♥தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர், வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?
♥பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல... ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.
♥வளர்ச்சி என்பது... அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி... மேனேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.
♥உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்... உங்களாலேயே அதை ரகசியமாய் வைக்க முடியாதபோது, மற்றவர்களால் எப்படி முடியும்?
0 Comments
Thank you