HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மங்களம் – ஒரு நிமிட கதை

♥#மங்களம் – ஒரு நிமிட கதை

♥வழக்கம் போல தன் மருமகள் மங்களம் அதே பூக்காரியிடம் பூ வாங்குவது கண்டு துணுக்குற்றாள் கோமதி.
ஏம்மா மங்களம்! எவ்வளவு அழகா மங்களம்னு உனக்கு பேர் வைச்சுருக்காங்க! இந்தப் பேருக்காகவே உன்னை என் மருமகளா ஏத்துக்கிட்டேன்! நீ என்னடான்னா இத்தனை பேர் இருக்க, ஒரு விதவைப் பெண் கிட்டயே பூ வாங்குறியே!

♥அவளுக்கு உதவி பண்ண வேணாம்னு சொல்லல! ஆனா.. அவகிட்ட பூ வாங்குறது அவ கண் பட்ட மாதிரி ஆயிடும்! என்றாள் மென்மையாக!

♥தலையில் பூவை வைத்தப்படியே சொன்னாள் மங்களம் “கண்டிப்பாக படாது அத்தே! மத்தவங்க கிட்ட பூ வாங்குனா அவங்க கவனம் முழுவதும், முழம் போடுறதுலயும், காசை பேரம் பேசி வாங்குறதுலயும் தான் இருக்கும்.
ஆனா இவங்க தன்னை மாதிரி இல்லாம, நம்ம கையால பூ வாங்குனவங்க நல்ல இருக்கணும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு கொடுப்பாங்க! அவங்க வேண்டுதலோட சக்தி எவ்வளவு இருக்கும்னு அவங்களோட இழப்பே சொல்லும்! அதனாலதான் அவங்க கிட்டயே வாங்குறேன்!

♥ஒரே விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்கும், தன் மருமகளை நினைத்து ஆச்சர்யம் அடைந்தாள் கோமதி.
♥– ப.உமாமகேஸ்வரி

Post a Comment

0 Comments