♥#அப்பா_மனசு_கல்லு
♥பக்கவாட்டில் நெய் வழிந்துகொண்டிருந்த சக்கரைப்பொங்கல் இருந்த சம்படத்தைத் திறந்தாள், வசந்தா. கும்மென்று ஏலமும் ஜாதிக்காயும் மணத்துக்கொட்டியதில் ஒருகணம் அந்த ஆஸ்பித்திரியின் டெட்டால் நாற்றம் காணாமல் போனது.
♥சுந்தரம்-(வசந்தாவின் அப்பா- )
நெற்றியை சுருக்கியபடி," என்னம்மா யாருக்கு இது?' என்று குழப்பமாய் கேட்டார்.
♥" என்னப்பா இப்படிக் கேக்குறீங்க? அம்மாக்குத்தான் பிடிக்குமேன்னு ஆசையா செஞ்சிட்டு வந்தேன்..வழிவிடுங்க அம்மாவைப்போய் பாத்து இதை கொடுக்கணும்"
♥அம்மாக்கு வேண்டாம் வசந்தா. வீட்டுக்கு எடுத்துப்போ..."
♥"அப்பா...ஊர்லேந்து காலைல வீடுவந்ததும் அம்மாக்காக இதை செய்து எடுத்திட்டு ஆசையா பாக்க வரேன், இங்க நீங்க அதட்டறீங்களே?"
♥"ஆமாம்...திரும்பிப்போ அதை வச்சிட்டு பாக்க வர்துன்னா வா... இல்லேன்னா வராதே.."
♥வசந்தா கோபமாய் வீடு வந்தாள்
நடுக்கூடத்தில் நின்றபடி கத்த ஆரம்பித்தாள்
♥"டில்லி அக்கோடியிலிருந்து அம்மாவ பார்க்க வந்திருக்கேன்..என்னை அப்பா ஆஸ்பத்திரில நல்லா அவமானப்படுத்திட்டார்"
♥"இதே கதை தான் எங்களுக்கும்" என்றார்கள் பெங்களூர் தங்கை லாவண்யாவும் .சிங்கப்பூர் தங்கை விஜியும்.
♥"அம்மாக்கு மசால்வடைன்னா உயிர்ன்னு ஆஸ்பத்திரிக்கு செய்து எடுத்துப்போனேன் அப்பா வெளீல போன்னு துரத்திட்டார்"..விஜி
♥"அம்மாக்கு மைசூர்பாக் பிடிக்குமேன்னு நெய்யைக்கொட்டி தங்கபிஸ்கட்மாதிரி
செய்து கொண்டு போன எனக்கும் நோஸ்கட்!"--லாவண்யா.
♥"அப்பா மனசு கல்லு.. அம்மாவை அடக்கி அடக்கி இத்தனை காலம் ஆண்டது போதாதுன்னு இப்போ இந்த நிலைமையிலும் அவங்க ஆசைகளை பூர்த்தி செய்ய விடமாட்டேங்கறார்.
'புற்று நோய் முற்றிவிட்டநிலையில் உங்க அம்மா ஆஸ்பித்ரில இருக்கா, வந்து அம்மாவைபாருங்க' ன்னு நமக்கு
போன் செய்து இங்கு வரவழைச்சிருக்கும் அப்பாவின் ஆளுமை இன்னமும் குறையல... அப்பாமனசு வெறும் கல் இல்ல பாறாங்கல்லு"
♥"ஆமாம்மா...என் மனசு பாறாங்கல்லுதான்.." சொன்னபடி உள்ளேவந்த சுந்தரம் தனது மூன்றுமகள்களையும் ஒருபார்வை பார்த்தார் .
.
#பிறகு_தொடர்ந்தார்
♥ "வெளியூர்ல இருக்கற உங்களுக்கெல்லாம் அம்மாக்கு வந்திருக்கிறநோய் முத்திப்போச்சு இன்னும் கொஞ்சநாள்ல இறந்துடபோறாங்கன்னு தெரியும் ஆனா உங்க அம்மாக்கு இது தெரியாது...தெரியவிடாம நான் இவ்வளவுநாளா காப்பாத்திட்டுவரேன் . ஏன்னா உலகத்துல மரணத்தைவிட மரணபயம் கொடியது .'நீபிழைப்பாய்'ன்னு சொல்லியே நான் நம்பிக்கைகொடுத்துட்டு மனோ பலத்துல அம்மாவின் உயிரை பிடிச்சி வச்சிருக்கேன்.
♥இந்த நேரத்துல நீங்க இப்படி அவளோடஆசைகளைநிறைவேற்ற ஒவ்வொரு பதார்த்தமாய் செய்து கொண்டுவந்தால் அவளுக்கு சந்தேகம் வந்துடும் ,சந்தேகம் பயமாகி அவள் உயிரை முன்கூட்டியே பறிச்சிடும் அதனால் தான் நான்,........" சுந்தரம் நெகிழ்ந்த குரலில் பேசி முடிப்பதற்குள்,
" அ..ப்..பா " என்று மூவரும் ஒரே குரலில் அலறி,அவர் காலில் விழுந்தனர்.......
♥அப்பாக்கள் எப்போதும் கரடுமுரடான புரியமுடியாத ஒரு அன்பின் சிகரம்....
0 Comments
Thank you