♥#மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா..?
♥மாதவிடாய் என்பது பெண்கள்_வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.
♥கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள். சில மருத்துவ நிபுணர்கள் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறி வருகிறார்கள். பாதுகாப்புடன் ஈடுபடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், இந்த வலிமிகுந்த நாட்களில் அவர்களை வற்புறுத்துவது உடல் உறவில் ஈடுபட அழைப்பது மிகவும் தவறு.
♥மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? கணவனின் அன்பும்,
அதிக அக்கறையும் தான்.
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உடல் உறவில் ஈடுபட அழைக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்.
♥மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.
♥அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும். கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.
வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.
♥இன்று கோவிலுக்கு போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.
♥வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?
♥பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.
0 Comments
Thank you