HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்; கிரகண நேரத்தில் வேலை செய்யக் கூடாது; கர்ப்பமும் சில நம்பிக்கைகளும்... உண்மை என்ன

♥கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்; கிரகண நேரத்தில் வேலை செய்யக் கூடாது; கர்ப்பமும் சில நம்பிக்கைகளும்... உண்மை என்ன

♥"குங்குமபூ சாப்பிட்டால் குழந்தை நிறமாகப் பிறக்காது. குங்குமப்பூ நல்ல மணமூட்டி. இதைப் பாலில் கலந்து குடித்தால் கர்ப்பிணிகள் வாந்தியெடுக்காமல் பாலைக் குடிப்பார்கள் அவ்வளவுதான்."

♥கர்ப்பமாக இருக்கும்போது பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கரு கலைந்து விடும். ஆட்டோவில் பயணம் செய்யக் கூடாது, மாடிப்படி ஏறக் கூடாது, தாம்பத்தியம் கூடாது என்று எக்கச்சக்க நம்பிக்கைகள் நம்மிடையே இருக்கின்றன. பாட்டிகளிடமிருந்து அம்மாக்களுக்கு, அம்மாக்களிடமிருந்து மகள்களுக்கு, பேத்திகளுக்கு என்று இந்த நம்பிக்கைகள் பல காலங்களாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்.

♥பழங்களும் நம்பிக்கையும்...
கர்ப்பிணிகள், பப்பாளியும் அன்னாசியும் சாப்பிடவே கூடாது என்கிற நம்பிக்கையை எப்போது, யார் நம் எல்லோருடைய மனங்களிலும் விதைத்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த இரண்டு பழங்களிலும் வைட்டமின்கள், தாது உப்புகள், கலோரி எனச் சத்துகள் நிறைந்து கிடக்கின்றன.  சர்க்கரையும் அதிகம் கிடையாது.  இதேபோல, சீசன் பழங்களான மாம்பழம் மற்றும் பலாப்பழத்தையும்கூட சாப்பிடக் கூடாது என்கிறார்கள். இந்த நான்கு பழங்களையுமே தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். கருவுக்கு இதனால் ஒரு பிரச்னையும் வராது.
கறுப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை, கறுப்பாகப் பிறக்கும் என்று நம்புகிறார்கள். குழந்தையின் நிறம் உங்கள் மரபைப் பொறுத்துத்தான் வரும். சாப்பிடுகிற திராட்சையின் நிறத்தால் அமையாது. இதேபோல இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டாலும் குழந்தை கறுப்பாகப் பிறக்காது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிறமாகப் பிறக்காது. குங்குமப்பூ நல்ல மணமூட்டி. இதைப் பாலில் கலந்து குடித்தால் கர்ப்பிணிகள் வாந்தியெடுக்காமல் பாலைக் குடிப்பார்கள் அவ்வளவுதான்.

♥கர்ப்பிணிகள் மாடிப்படி ஏறலாமா?
`ஆபீஸ் இரண்டாவது மாடியில் இருக்கு டாக்டர். வேலையை விட்டுடவா?'; `ரெண்டாவது மாடியில் இருக்கோம். எங்க அப்பார்ட்மென்ட்டில் லிஃப்ட் கிடையாது. வீடு ஷிஃப்ட் பண்ணிடட்டுமா டாக்டர்' என்று கேட்கிறார்கள். மாடிப்படிகளில் தாராளமாக ஏறலாம். ஆனால், பொறுமையாக ஏற வேண்டும். வேகமாக ஏறினால், மூச்சு வாங்கும். அதனால், நிதானமாக உங்கள் செளகர்யத்துக்கு ஏற்றபடி மாடிப்படி ஏறலாம்.
மல்லாந்து படுத்தால் சிசுவின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளுமா?

♥கர்ப்பிணிகள் தூங்கும்போது திரும்பிப்படுக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தடவையும் எழுந்துதான் திரும்பிப் படுக்க வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதுதான் என் பதில். அடுத்து கர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால், சிசுவின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக்கொள்ளுமா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் ஆகவே ஆகாது. 6 மாதங்கள் வரைக்கும் கர்ப்பிணிகள் தாராளமாக மல்லாந்து படுக்கலாம். அதற்கு மேல் கர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால், அம்மாவிடமிருந்து சிசுவுக்கு ரத்தம் எடுத்துச் செல்கிற ரத்த நாளங்கள் அழுத்தப்படும். ஆனால், தூக்கத்தில் அவர்கள் தெரியாமல் மல்லாந்து ஒன்றிரண்டு மணி நேரம் படுத்துவிட்டால் கருவுக்கு ஒன்றும் ஆகாது.

♥பைக்கில், ஆட்டோவில் போகலாமா?
பைக்கில் போகலாமா; ஆட்டோவில் போகலாமா, காரில்தான் போக வேண்டுமா என்று சந்தேகம் கேட்கிறார்கள் கர்ப்பிணிகள். என்னுடைய பதில், நீங்கள் பைக்கில் பின்னாடி உட்கார்ந்தும் போகலாம்; நீங்களே ஓட்டவும் செய்யலாம். ஆட்டோவிலும் பயணம் செய்யலாம். ஆனால், 10 நிமிடங்களில் போகிற இடத்துக்கு 20 நிமிடங்களில் போகிற அளவுக்கு நிதானமாகச் செல்ல வேண்டும். ரயிலில் என்றால், சிறு தொலைவுப் பயணங்கள் என்றால் ஓகே. ஆனால், ரயிலில் டெல்லிக்குப் போகப் போகிறீர்கள் என்றால் நான் வேண்டாம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால், நடுவழியில் ஒரு மருத்துவ உதவி தேவையென்றால், அடுத்த ஸ்டேஷன் வரை காத்திருக்க வேண்டி வரலாம். அந்த ஸ்டேஷனுக்கு அருகே 24 மணி நேர மருத்துவமனை இருக்க வேண்டும் என்று சில சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குள் கர்ப்பிணி நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாதல்லவா? அதற்குப்பதில் விமானத்தில் செல்லலாம்.

♥கர்ப்பக் காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா?

♥மருத்துவர்கள் நாங்களே, கருத்தரித்த முதல் 3 மாதங்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் அறிவுறுத்துவோம். அதன் பிறகு ஓகே. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்ப மாதங்களில் உறவின்போது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது ரத்தத் தீற்றல் படலாம். இப்படி வந்தால் உறவுகொண்டதால் வந்ததா அல்லது கருவுக்கு ஏதேனும் பிரச்னையா என்று மருத்துவர்கள் நாங்கள் சந்தேகப்பட வேண்டிய நிலைமை வந்துவிடலாம்.
கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டுமா?

♥ வேண்டாம், அவசியமில்லை. காய்கறி நறுக்கினால் குழந்தை காது அறுந்து பிறக்கும் என்பதில் மருத்துவ உண்மையில்லை. கிரகணத்திலிருந்து வருகிற கதிர்களால் கருவுக்குப் பிரச்னைகள் வருமா என்று கேட்கிறார்கள். நீங்கள், அதை நேரடியாக வெறும் கண்களால் பார்த்தால் வரலாம். மற்றபடி, அன்றைக்கும் எல்லா வேலைகளையும் செய்தபடி நிம்மதியாக இருங்கள்.

♥பாதங்கள் வீங்கினால் பார்லி வாட்டர் குடிக்க வேண்டும்... உண்மையா?
`கால் பாதங்கள் வீங்கினால், என் அம்மா பார்லி வாட்டர் குடிக்கச் சொல்கிறார்கள் டாக்டர்' என்று கர்ப்பிணிகள் என்னிடம் சொல்வார்கள். இது தவறான அறிவுரை. பார்லி வாட்டர் உடலில் இருக்கிற தண்ணீரை வெளியேற்றி விடும். அதிலும் கோடைக்காலத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் பார்லி வாட்டர் குடித்தால் ரத்தத்தின் அளவு மாறலாம் ஜாக்கிரதை. இதனால் பலவிதமான பிரச்னைகள் வரலாம். கால்களைச் சற்று மேலே தூக்கி வைத்தாலே வீக்கம் குறைந்து விடும்.

Post a Comment

0 Comments