HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை #தவம் ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை #சவம்...

♥ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை #தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை #சவம்...

♥ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழ் கலாச்சாரம்...

♥கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என கற்பித்தார்  முண்டாசுக்கவி பாரதி...

♥ஒழுக்கத்தை  உயிருக்கு மேலாக உயர்த்தினார் உலக பொதுமறைப் படைத்த திருவள்ளுவர்...

♥கல்விற்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்..

♥வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால் கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்...

♥எத்தனை பெருமைகள்  திறமைகள் இருந்தாலும் ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாருக்கும்...

♥நல்ல பெயரை வாங்குவது கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு...

♥கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கணினி உலகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை...

♥மாதவியும், சூர்ப்பநகையும்  ஒழுக்கம் தவறியதால் மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை...

♥இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள்  ஆக்கப்பட்டான். இராவணன் நேர்மை தவறிதால் அரக்கன் ஆக்கப்பட்டான்...

♥பறவைகள் கூட ஒழுக்கத்துடன் வாழும் போது பகுத்தறிவு பெறற் மனிதன் ஒழுக்கம் தவறலாமா...

♥தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்...

♥ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல்லொழுக்கம்...

♥ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்கு பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவ மனிதனா ?
சிந்தியுங்கள்...

♥இனி ஒழுக்கம் தவறி நடப்பவன் பெயர்
இரண்டு கால் சாத்தான் என்று உணர்...

♥மனம் போன போக்கில் வாழ்து வாழ்வன்று... மனதை கட்டு கோப்பில் வைத்து வாவதே வாழ்வாகும்...

♥ஒழுக்கம் என்பது பண்பாடு மட்டும் 'அன்று'
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது  #இன்று

♥ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயணில்லை...

♥ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ   தேடி வந்து சேரும்...

♥ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது #எய்ட்ஸ்...

♥மேலைநாட்டு நாகரீகத்தை கடைபிடித்ததால் தான்  நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது...

♥உலகிற்கே விளக்காக திகழ்வது நம் தமிழ்நாடு பண்பாட்டு சீரழிவால் சிதைகின்றது நம் நாடு...

♥அந்நியரிடம் உள்ள நல்ல  பழக்கத்தை கடைபிடிப்போம் கெட்ட பழக்கத்தை  விட்டொழிப்போம்...

♥உடல் நலனுக்கு ஒழுக்கம்  அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்...

♥நல்லவர்களை பாடமாக கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்..

♥ஒழுக்கம் என்பது  பால் போன்றது
ஒழுக்கக்கேடு  என்பது விஷம் போன்றது...

♥ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் #விஷம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம்
சபலபட்டாலூம் சஞ்சலம்...

♥இப்படித்தான்  வாழ வேண்டும் என்பது ஒழுக்கம்

♥எப்படியும் வாழலாம் என்பது மூடபழக்கம் .

♥பகுத்தறிவை பயண்படுத்தி வாழ்வது மனித இனம்  பகுத்தறிவை பயண்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்...

♥எதை இந்தாலும் திரும்ப பெற்று விடலாம்
ஒழுக்கத்தை  இழந்தால் எல்லாம் போய்விடும்...

♥வாழ்க்கைத்துணை தேடி அலைய தேவையில்லை ஒழுக்கத்தோடு இரூந்தால் வாழ்க்கைத் துணையே தேடிவரும்...

♥மனம் ஒரு குரங்கு என்றார்கள் - நம்
கட்டுப்படுத்தத கற்க்க வேண்டும்....

♥முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்...

♥ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை  " தவம் "
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை  " சவம் "
ஒழுக்கமே உயர்வு தரும்!!

Post a Comment

0 Comments