♥உங்களை நேசிப்பவர்கள் மீது இப்படி அக்கறையாக இருங்கள்...!
♥இந்த உலகமே அன்பும், அக்கறையும் நிறைந்தது தான். நீங்கள் ஒருவர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் அவர்களது வாழ்வை மேம்படுத்துவ மட்டும் இன்று அவர்களிடம் உங்கள் மீதான மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கும்.
இந்த செய்தியில் ஒருவருடன் நீங்கள் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்
♥#மற்றவர்களின்_கஷ்டங்களை_புரிந்து #கொள்ளுங்கள்
இது இந்தியாவில் உள்ள பலரிடம் இருக்கும் பிரச்சனை ஒருவரது இன்பமான நேரங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் பலர் அவர் கஷ்டமான நேரங்களில் அவர்களுடன் இருப்பது இல்லை. ஒருவர் பெரும்பாலும் கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களால் தனிமைபடுத்தப்படுகிறார். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவருடன் நீங்கள் இருப்பதே பெரும் அக்கறையான விஷயம்
♥#பேச்சும்_செயலும்_கவனம்
நீங்கள் ஒருவருடன் பேசும் போதும் பயன்படுத்தும் வார்த்தைகளிலும், நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும் மற்றவர்கள் மனம் புண்படும் படியாவோ, கோபப்படுத்தும் விதமாகவோ நடந்து கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
♥#கோபத்தையும்_காண்பிக்க_வேண்டும்.
நீங்கள் ஒருவர் மீது எப்பொழுதும் கோபப்படாமல் இருப்பதும் தவறுதான் அவ்வப்போது உங்கள் கோபத்தையும் வெளியில் கொண்டுவந்து விட வேண்டும். குறிப்பாக மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்கள் கோபபட்டாவது அவர்களை தவறு செய்ய விடாமல் தடுக்க வேண்டும் அதனால் தற்போது அவர்கள் உங்கள் மீது கோபபட்டாலும். அவர்கள் செய்ததது தவறு என்பதை உணரும் போது உங்கள் கோபத்தின் நியாயத்தையும் புரிந்து கொள்ளுவார்கள்.
♥#பாராட்டுங்கள்
இந்த உலகமே பாராட்டிற்காக தான் ஏங்குகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறார். அது தான் அவனுக்கு ஊக்கு மருந்தும் கூட . நீங்களும் அப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பீர்கள் அதனால் நீங்கள் மற்றவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் பாராட்ட பழகுங்கள்.
♥#சுயநலத்தை_கைவிடுங்கள்
ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் எந்த காரணத்தை கொண்டும் சுயநலத்துடன் அந்த முடிவை எடுக்காதீர்கள். அது மற்றவர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். அதனால் சுயநலத்தை தவிர்த்து பொதுவான சிறந்த முடிவுகளையே எடுங்கள்.
♥#கவனம்_செலுத்துங்கள்
உங்களிடம் ஒருவர் வந்து பேசுகிறார் என்றால் உங்களுக்கு அவர் பேசும் விஷயத்தில் ஆர்வமில்லை என்றாலும் அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனமுடன் கேளுங்கள். நீங்கள் அவர் பேசும் போது சரியாக கேட்காமல் இருப்பது அவரிடம் உங்கள் மீதான மரியாதையை குறைத்து விடும்.
♥#அமைதி
முடிந்த வரை அமைதியாக இருக்க பழகுங்கள். தேவையற்ற பேச்சு பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் அதனால் நீங்கள் அமைதியாக இருப்பதால் அதை தவிர்க்க முடியும்.
♥#பாசம்_காட்டுங்கள்
உங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் பாசம் காட்டுங்கள். உங்கள மனதிற்குள் அந்த பாசம் எப்பொழுதும் இருந்தாலும் அந்த பாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டும் போது தான் தன் மீது பாசம் கொண்ட நபர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியவரும். முக்கியமான உங்கள் மனைவி/ கணவன் மற்றும் குழந்தைகளிடமாவது இதை செய்யுங்கள்
♥#முறையாக_நடத்துங்கள்
நீங்கள் எவ்வாறு மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களோ அதே போல நீங்களும் மற்றவர்களை மதிக்க பழகுங்கள் அது உங்களது இயல்பை இன்னும் அழகானதாக்கும்
0 Comments
Thank you