HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணம்

♥பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணம்

♥பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது.
வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

♥இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும்.
எனவே இப்புற்றுநோய் தொடர்பான விளக்கங்கள், கண்டறியும் பரிசோதனைகள், தடுப்புமுறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த் தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.

♥கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் என்றால் என்ன? (Cervix Cancer)
பெண்களின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியான கர்ப்பப்பை வாசலில் உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 – 40 வயதையுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சிலவேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்குட்பட்ட பெண்களில் இவை மிக அரிதாகவே தோன்றுகின்றன.

♥கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தப் பெண்ணிலும் பப்பிலோமா வைரஸ் (HPV) எனப்படும் வைரசின் தொற்று கர்ப்பப்பை வாசலில் ஏற்படுவது வழக்கம். ஆனால் எமது உடலிலுள்ள எதிர்ப்புச்சக்திகள் இந்த வைரசை எதிர்த்து அழித்துவிடுகின்றன. ஒரு சிறிய பகுதி பெண்களில் (10%) இந்த எதிர்ப்புச் சக்தி சரியாகத் தொழிற்படாததால் பப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாசல் கலங்களிலேயே தேங்கி அவற்றின் கட்டமைப்பை சீர்குலைத்து பல வருடங்களில் புற்றுநோயாக உருவெடுக்கும்.

♥புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள், மிக இளம் வயதிலேயே தாம்பத்திய உறவை ஆரம்பித்தவர்கள், பாலியல் துர்நடத்தை உடையவர்கள் போன்றவரில் இம்மாற்றம் சற்று வீரியமாக நடைபெறும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயின் நோய் அறிகுறிகள்
இந்நோயின் ஆரம்பகாலப் பகுதியில் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது.

♥இப்புற்றுநோய் சற்று பெரிதாக வளருகின்ற போது ஏற்படக்கூடிய முதல் அறிகுறி அசாதாரண இரத்தப் போக்குடனான மாதவிடாய் அதாவது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் இரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்குப் பின்னரான இரத்தபோக்கு, மாதவிடாய் முடிவுற்று மெனோபோஸ் (Menopause) நிலையை அடைந்த பெண்களில் பின்னர் ஏற்படும் இரத்தப்போக்கு சிலவேளைகளில் இப்புற்றுநோய் துர்மணமுடைய திரவக்கசிவையும் ஏற்படுத்தும். அத்துடன் நோயின் பிந்திய காலப்பகுதியில் அடிவயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

♥கர்ப்பப்பை வாசல்ப்புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
பெண்களது அடிவயிற்றைப் பரிசோதித்து கர்ப்பப்பையில் அசாதாரண தன்மைகள் இருப்பதாக சந்தேகித்தால் அவ்வாறான அசாதாரண பகுதியிலிருந்து சிறிய இழையங்களை (Biopsy) எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி நோயை உறுதிப்படுத்தலாம்.

♥மேலும் கொல்பொஸ் கொப்பி (Colposcopy) எனப்படும் பூதக்கண்ணாடி வில்லைகள் கொண்ட கருவி மூலம் இவ்வாறான அசாதாரண மாற்றங்களை மிக நுணுக்கமாக அவதானித்து இழையங்களைப் பரிசோதித்து இந்நோயை உறுதிப்படுத்தலாம். மற்றும் இப்புற்றுநோய் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்குரிய சிகிச்சைகள்
கர்ப்பப்பை வாசல்புற்று நோய்க்கு இருவழிகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

♥அதாவது சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை. (Radiotherapy) சிகிச்சையானது பெண்ணின் வயது, அவரது புற்றுநோயின் உக்கிரத்தன்மை, அவரது தேக ஆரோக்கிய நிலை மற்றும் அவரது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இப்புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கும். ஆனால் இந்நோய் சற்றுப் பிந்திய நிலையில் அறியப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையே பொருத்தமானது.

♥கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் வருமுன் தடுத்தல்
இப்புற்றுநோய் வந்த பின் சிகிச்சையளித்தும் பலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுவதனால் இதனை வருமுன் தடுப்பதே சிறந்தது. இவ்வாறு வருமுன் தடுப்பதற்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தவொரு பெண்ணும் ஒழுங்காக கர்ப்பப்பை வாசல் பரிசோதனையான பப் டெஸ்டை (Pap Test) செய்வது அவசியம்.

♥இந்தப் பரிசோதனையை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 65 வயது வரை செய்வது சிறந்தது. இந்தப் பரிசோதனையை பெண்கள் அனைவரும் அறிந்திருந்து தங்களாகவே முன்வந்து செய்வதன் மூலம் இந்த நோயை இலகுவாக வெற்றிகொள்ளலாம்.
அவ்வாறான பரிசோதனையில் ஏதாவது அசாதாரண நிலைமைகள் கர்ப்பப்பை வாசலில் இருப்பது கண்டறியப்பட்டால் மிகவும் எளிமையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை வராமல் தடுத்து விடலாம்.

♥கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனை (pap Test) எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
இது ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனைக் கூடத்தில் (Clime) மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது உங்களை மயக்கமடையச் செய்யவோ தேவையில்லை.
அத்துடன் இதன்போது ஒரு வலியோ நோவோ ஏற்படாது. இதற்காக எடுக்கும் நேரம் 5 நிமிடங்களாக இருக்கும். இதன்பின் நீங்கள் உடனடியாக வீடு செல்லக் கூடியதாக இருக்கும். இதன்பின் இரண்டு கிழமைகளில் இப்பரிசோதனை பெறுபேறுகளை வைத்திய நிபுணருடன் நீங்கள் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.

♥இப்புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
கர்ப்பப்பை வாசல்ப்புற்றுநோய் ஒரு வைரசின் தாக்கத்தினாலேயே உருவாகின்றது. இவ்வைரஸ் தொற்று தடுக்கும் தடுப்பூசிகள் இந்நோயைப் பெரியளவில் தடுத்துவிடும். மேலைநாடுகளில் இத்தடுப்பூசி 13 – 16 வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments