HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பல பெண்களும் தங்களின் மார்பக அளவை பெரிதாக்க மூலிகை செயல்முறைகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

♥ பல பெண்களும் தங்களின் மார்பக அளவை பெரிதாக்க மூலிகை செயல்முறைகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கையான பல பொருட்களை கொண்டு உங்கள் மார்பகங்களின் அளவை பெரிதாக்க முடியும். இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் சில முதன்மையான மூலிகைகளைப் பற்றியும் பின் விளைவுகளையும் பற்றி இப்போது பார்க்கலாமா?
#பெருஞ்சீரகம்
♥சோம்பு மார்பகங்களை மேம்படுத்தவும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கவும், இந்த பொதுவான மசாலாவை பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். மார்பக அளவை பெரிதாக்க உதவும் பல பொருட்களைப் போல, பெருஞ்சீரகமும் அதன் வேலையை கச்சிதமாக செய்கிறது. பெருஞ்சீரகம் உங்களுக்கு ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்களை வழங்குகிறது. இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜெனை போன்றதே. பெருஞ்சீரகத்தை தேநீராக அல்லது உணவில் கலந்து உட்கொள்ளலாம். பெருஞ்சீரக எண்ணெய்யை மார்பகங்களின் மீது நேரடியாக தடவலாம். பெருஞ்சீரகத்தில் கூடுதல் மருத்துவ குணங்கள் உள்ளது. இரத்த கொதிப்பு, நெறிப்பு, மாதவிடாய் இன்மை, ஆஸ்துமா போன்றவைகளுக்கு சிகிச்சையளிக்க இதனை பயன்படுத்தலாம். பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஊக்குவிக்கவும் இது உதவும். பெருஞ்சீரகத்தில் பைடோ-நியூட்ரியன்ட்டுகள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளது. இது மார்பாக அளவை அதிகரிக்க உதவும்.
#நிகழக்கூடியபக்க_விளைவுகள்
♥செலரி, கேரட் போன்றவைகள் உங்களுக்கு அலர்ஜி என்றால் பெருஞ்சீரகத்தாலும் உங்களுக்கு அலர்ஜி ஏற்படலாம். சூரிய ஒளியில் உங்கள் சருமத்தின் உணர்ச்சியை அதிகரிக்க செய்யும் பெருஞ்சீரகம். இதனால் சூரிய ஒளியால் உங்கள் சருமம் எரியும். நீங்கள் மென்மையான சருமத்தை கொண்டுள்ளீர்கள் என்றால் போதிய சன்ஸ்க்ரீன் க்ரீமை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.
#சிவப்பு_தீவனப்புல் (Red Clover)
♥அனைத்து வகையான பொதுவான நோய்களை குணப்படுத்த இந்த மூலிகை உதவும். ஆனால் பெரிய மார்பகங்களை அளிக்க உதவும் என்ற அதன் உண்மையான ஆற்றல் பலருக்கும் தெரிவதில்லை. சிவப்பு தீவனப்புல்லில் ஜெனிச்டீன் போன்ற பல்வேறு ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் வளமையாக உள்ளது. இந்த பொருள் குறிப்பாக உங்கள் மார்பகங்களை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு காரணம் இது மனித ஈஸ்ட்ரோஜென் ஏற்பிகளுடன் உடனடியாக இணைந்திடும். மேலும் மார்பக வளர்ச்சியை கட்டுப்படுத்துவது இது தான்.
#நிகழக்கூடிய #பக்க #விளைவுகள்
♥சிவப்பு தீவனப்புல்லால் சில பெண்களுக்கு குமட்டல், தலைவலி, தசை வலி மற்றும் புணர்புழை இரத்த ஒழுக்கு ஏற்படலாம். நீங்கள் இரத்த கசிவு கோளாறால் அவதிப்பட்டு வந்தால், சிவப்பு தீவனப்புல் உங்கள் இரத்த கசிவை மேலும் அதிகரிக்கும். அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டாமல் இதனை கவனமாக பயன்படுத்தவும்.
#வெந்தயம்
♥பழங்காலம் முதல் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது வெந்தயம். ஆயுர்வேதம் என்பது 4000 ஆண்டு கால பழமையான மருத்துவ முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். குழம்பு பொடியில் இதனை பலரும் பயன்படுத்துவார்கள். மேலும் பல உணவுகளுக்கும் டெசர்ட்களுக்கும் சுவை மணமூட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அதிலுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்களுக்காகவும் இது அறியப்படுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருந்தால், மார்பக வளர்ச்சி இருப்பதில்லை. வெந்தயம் ப்ரோ-லாக்டினையும் வழங்குகிறது. இதுப்போக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். மார்பக வளர்ச்சியையும் மேம்படுத்தும் ப்ரோ-லாக்டின்.
#நிகழக்கூடியபக்க_விளைவுகள்
♥உணவில் உள்ள அளவை விட வெந்தயத்தை அதிகமாக உண்ணும் போது, வயிற்று வலி,வாய்வு, பொருமல், வயிற்று போக்கு, இருமல்,மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் முக வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணர்திறன் மிகைப்பால் அவதிப்படுபவர்களுக்கு தீவிரமான அலர்ஜிகள் ஏற்படலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை உண்ணும் போது இரத்ததில் சர்க்கரை அளவு குறையக் கூடும்.
#காட்டுவள்ளிகிழங்கு
♥பெண்களின் இனப்பெருக்க சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பல நூற்றாண்டுகளாக டானிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது காட்டு வள்ளி கிழங்கு. இறுதி மாத விடாய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தைலமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்பக வளர்ச்சியையும் இது மேம்படுத்தும். அதன் பயனைப் பெற அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், இதனை வெந்தயத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். அதற்கு காரணம், மார்பக பெரிதாக்கும் குணங்களைக் கொண்டுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் வெந்தயத்தில் உள்ளது.
#நிகழக்கூடியபக்கவிளைவுகள்
♥அதிகமாக உட்கொள்ளும் போது வாந்தி ஏற்படலாம். புரதம் S குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொள்ளும் போது, இரத்த உறைகட்டிகள் உருவாகும் இடர்பாடு அதிகரிக்கும்.
#ஸாபால்மெட்டொ (Saw Palmetto)
♥வீங்கிய சுக்கிலவகம் என அழைக்கப்படும் தீங்கற்ற சுக்கிலவகம் மிகைப்பெருக்கம் என்ற அழற்சி நிலைக்கு ஸா பால்மெட்டொ மூலிகையின் விதைகளை நிவாரணமாக பயன்படுத்துகின்றனர். இருப்பினும் மார்பக அளவை பெரிதாக விரும்பும் பெண்கள் ஸா பால்மெட்டொ மூலிகையையும் பயன்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் போது அதனை ஆள இந்த மூலிகை உதவும். இது அதிகமாக இருக்கும் போது மார்பக வளர்ச்சி தடைப்படும்.
நிகழக்கூடிய_பக்க_விளைவுகள்
♥மிதமான பக்க விளைவுகள்,  குமட்டல்,  மயக்கம்,தலைவலி, வாந்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு.
#குறிப்பு :-
♥இந்த மூலிகைகள் எல்லாம் தீமையை ஏற்படுத்தாமல் பாதுகாப்பானதாக தெரியலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உண்ணும் போது, அது ஆபத்தாய் முடியும் என சமீப காலமாக நடத்தப்பட்டு வரும் பல ஆய்வுகள் கூறுகிறது. இது உடல் ரசாயனத்தின் இயற்கையான சமநிலையை பாதிக்கும். அதனால் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தால், இந்த மூலிகைகளை உட்கொள்வதற்கு முன்பு சோதித்து பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
♥தற்போது இருக்கும் அலர்ஜி நிலையை இந்த மூலிகைகள் இன்னும் மோசமடைய செய்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சனை இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, இவைகளை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள். இந்த மூலிகைகள் உங்கள் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தாமல் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்
உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்.

Post a Comment

0 Comments