♥அடிமைப்படுத்தாதே
♥பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே..
கேட்பதற்கு நாதியில்லா இனமாகி போனதே
பெண் இனம்.
கேட்பதற்கு நாதியில்லா இனமாகி போனதே
பெண் இனம்.
♥வயது ஐந்து கொண்ட சின்னவண்ணக்குயில் கூட உன் கண்ணிற்கு பதினெட்டு வயது மங்கையாய்
தெரிவதேன்?
தெரிவதேன்?
♥உன்னை பெற்றவளும் பெண்தானே!
உடன் பிறந்தவளும் பெண்தானே!
நீ கட்டியவளும் பெண்தானே!
இருந்தும் ஏனடா அடிமைப்படுத்துகிறாய்?
உடன் பிறந்தவளும் பெண்தானே!
நீ கட்டியவளும் பெண்தானே!
இருந்தும் ஏனடா அடிமைப்படுத்துகிறாய்?
♥பெண் வேசி என முரசு முழங்கி கொண்டு
அலைபவனே!
முலைப்பால் ஊட்டியவளை மறந்திட்டு
திரிபவனே!
இதையும் கேளடா.... நன்றாய் கேளடா.
அலைபவனே!
முலைப்பால் ஊட்டியவளை மறந்திட்டு
திரிபவனே!
இதையும் கேளடா.... நன்றாய் கேளடா.
♥கண்ணகியாய், சீதையாய், தமயந்தியாய்
நெஞ்சில் வீர உரம் கொண்டு கற்புநெறி தவறாது வாழ்கின்ற பெண்களை கண்டிரவில்லையோ நீ இன்னும்?
நெஞ்சில் வீர உரம் கொண்டு கற்புநெறி தவறாது வாழ்கின்ற பெண்களை கண்டிரவில்லையோ நீ இன்னும்?
♥இக்காரியம் புரி உனக்கென் மகள் என
சொல்லியே கழுதையின் கழுத்தில்
பொற்கிளியை கட்டிவிடுவான்
கேடுகெட்ட தந்தைகாரன்.
சொல்லியே கழுதையின் கழுத்தில்
பொற்கிளியை கட்டிவிடுவான்
கேடுகெட்ட தந்தைகாரன்.
♥மதுவிற்கு அடிமையாகி மாதுவால் வாழ்வுதனை துர்நாசம் செய்து மகாலட்சுமியாய் வந்தவளை
மூதேவி கூட மதிக்காத பரதேசியாக்கி விடுவான் கட்டியவன்.
மூதேவி கூட மதிக்காத பரதேசியாக்கி விடுவான் கட்டியவன்.
♥பிள்ளை இல்லா சனியன் என்னும் பட்டம்
பல்கலைக்கூடத்தில் கூட கிடைக்காது
மாமியார் வீட்டில் கிடைத்து விடும்
பன்னீர் மாதங்களில்.
பல்கலைக்கூடத்தில் கூட கிடைக்காது
மாமியார் வீட்டில் கிடைத்து விடும்
பன்னீர் மாதங்களில்.
♥பட்டப்பகல் வெட்ட வெளிச்சம் நட்டநடு வீதி பொட்டப்புள்ள கற்பளிப்பு இதுதானே
முதல் செய்தி பத்திரிகை புரட்டுகையில்
பாரதி நீ கண்ட பெண் விடுதலை இதுதானா?
முதல் செய்தி பத்திரிகை புரட்டுகையில்
பாரதி நீ கண்ட பெண் விடுதலை இதுதானா?
♥மகா கவியே சொல்லி திருந்தா உலகமடா!
நல்லவன் போல் வேசம் போட்டு கலகக்காரன் வாழும் நிலமடா இது.
நல்லவன் போல் வேசம் போட்டு கலகக்காரன் வாழும் நிலமடா இது.
♥என்றும் நட்புடன்,
அஷ்வினி வையந்தி. இலங்கை
தமிழ் விசேட கற்கைநெறி, இரண்டாம் ஆண்டு. கிழக்கு பல்கலைக்கழகம்.
அஷ்வினி வையந்தி. இலங்கை
தமிழ் விசேட கற்கைநெறி, இரண்டாம் ஆண்டு. கிழக்கு பல்கலைக்கழகம்.
0 Comments
Thank you