பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்........
ஆண்மையற்ற கணவன்
அகிலம் கொடுத்தது
அவளுக்குப் பட்டம் #மலடி....!
குடிகார கணவன்
குடித்தே செத்தான்
அவளுக்குப் பட்டம் #விதவை....!
ஆண் சென்றான்
விபச்சார விடுதி
அவளுக்குப் பெயர் #விபச்சாரி...!
கோபித்துக் கொண்டு
கொழுந்தியாளை மணந்தான்
அவளுக்குப் பெயர் #வாழாவெட்டி....!
அடுத்தொரு வாழ்வை
அவன் தேர்ந்தெடுத்தான்
அவளுக்குப் பெயர் #கூத்தியாள்.....!
இத்தனை பட்டமும்
யார் கேட்டது....!
நீங்களாய்க் கொடுத்தீர்கள் #இலவசம்..!
வாழ்வை இழந்து
வசந்தங்களைத் தொலைத்து
வதங்கிக் கொண்டிருப்பவள் #வானவில் !
வாழ்ந்து பாருங்கள்..!
அவளாய் ! ஊமை
நெஞ்சின் ராகம் புரியும் #அப்போது...!
0 Comments
Thank you