HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இருக்கும் 10 பிரச்சனைகள்

♥குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இருக்கும் 10 பிரச்சனைகள்
♥கருவாய் குழந்தை உருவானவுடன் குடும்பம் மொத்தத்தில் ஆனந்த அலை பரவி காணப்படும். அப்போதிலிருந்தே தாய் குழந்தை பற்றி கனவு காண துவங்குதல், குழந்தையிடம் பேசுதல் போன்றவற்றை செய்து மகிழ்ச்சியடைவார்கள். எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாலும், குழந்தை பிறந்து தாய்ப்பாலூட்டும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் இப்போதிலிருந்து அம்மாக்களிடம் குழந்தை வளர்ப்பு பற்றிய கவலையும் துவங்கிவிடும். எப்படி செய்ய வேண்டும், எதை செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்போது பால் கொடுக்க வேண்டும், எத்தனை முறை பால் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்ய வேண்டியவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளும் தாய்கள், அதிலிருக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள தவறிவிடுகிறார்கள். இங்கு தாய்பால் கொடுப்பதில் இருக்கும் 10 பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்
.1 தாய்ப்பாலூட்டும் போது ஏற்படும் #வலி
♥குழந்தைக்கு முதன் முதலில் தாய்ப்பால் ஊட்டும் போது, மார்பக காம்புகளில் புண் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. தாய்ப்பாலூட்டும் போது ஏற்படும் வலி ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தால், நீங்கள் சரியான நிலையில் குழந்தையை வைத்து பால் கொடுக்கவில்லை என்று அர்த்தம். குழந்தை சரியாக மார்பக காம்புகளில் பால் குடிக்காமல், அதை சுற்றி உள்ள பகுதியை அதிகம் வாயில் வைத்திருந்தால், உங்களுக்கு வலி ஏற்படும். அவர்களது கன்னம் மற்றும் மூக்கு உங்கள் மார்பகத்தை தொட்டு கொண்டிருப்பதால், உங்கள் குழந்தையின் உதடு உங்கள் மார்பக காம்புகளில் அல்லது அதை சுற்றி உள்ள பகுதியில் இருப்பதை உங்களால் பார்க்க முடியாது.
2 #மார்பக #காம்பு #வெடிப்பு
♥உலர்ந்த சருமம், தவறாக பாலை வெளியேற்றுதல் மற்றும் பாலூட்டுவதால் ஏற்படுகிறது. குழந்தைக்கு பால் கொடுக்க துவங்கிய முதல் வாரத்தில், இரத்தத்துடனான கசிவு ஏற்படும். இது குறித்து கவலையடைய தேவையில்லை, சிறிதளவு இரத்தம் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. குழந்தையின் நிலையை பரிசோதித்துக் கொண்டு, குறைவான இடைவெளியில் அடிக்கடி பால் கொடுங்கள். சுத்தமான நீரை மட்டும் உபயோகித்து, உங்கள் மார்பக காம்புகளை சுத்தம் செய்வது போதுமானது.
3 #பால் #கட்டிக் #கொள்ளுதல்
♥பால் முற்றிலும் வெளிவருவது தடுக்கப்பட்டு வலி ஏற்படுவது பால் கட்டி கொள்ளுதல் எனப்படுகிறது. மார்பகத்தில் புண், கடினமான கட்டிகள் அல்லது சிவந்து காணப்படுதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.
இது உங்களுக்கு வலி அல்லது காய்ச்சலை ஏற்படுத்தினால், நோய் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறி. இவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குழந்தைக்கு பால் கொடுக்க அதிக இடைவெளி எடுத்து கொள்ளாதீர்கள் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிவது பால் கட்டிக்கொள்ள செய்யும். மன அழுத்தம் கூட ஒரு காரணம் தான். இதற்கு போதுமான ஓய்வு மற்றும் மார்பங்களில் மசாஜ் செய்து கொள்வது சிறந்தது.
4 #மார்பகம்_பெரிதாகுதல்
♥வாயில் வைப்பது கடினமாக இருப்பதால் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் கடினமான ஒன்றாகிவிடும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன் கைகளால் மசாஜ் செய்வது பால் ஓட்டத்தை அதிகரிக்கவும், மார்பகத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.
5 #குறைவானபால்
♥தாய்ப்பால் கொடுத்தல் என்பது வேண்டிய போது செய்யக் கூடிய ஒரு செயல் முறையாகும். குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என மருத்துவர் கூறினால் அது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அடிக்கடி பால் கொடுத்தல் மற்றும் கைகளால் தினமும் பம்ப் செய்வது பாலை அதிகரிக்க செய்யும். அதிக அளவு சத்து பானங்கள் குடிப்பது மற்றும் அதிக கலோரிகளை உட்கொள்வதால் தாய்ப்பால் அதிகரிக்காது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
6 #உள்ளிழுக்கப்பட்ட #அல்லது #தட்டையான_மார்பங்கள்
♥குழந்தையை மார்பக காம்புகளில் வைக்கும் முன், பம்ப்களை உபயோகித்து,பாலை அதிகரிக்க செய்யுங்கள். குழந்தைகளுக்கு பாலுட்டும் முன் மார்பக ஷெல்களை பயன்படுத்துங்கள். உங்கள் மார்பக பால் போதுமானது என்று நினைத்தால், உங்கள் குழந்தைக்கு பால் தாய்ப்பாலூட்டுவதில் சிரமம் இருந்தால் மார்பக பாதுகாப்புறைகளை பயன்படுத்துங்கள்.
7 #அடிக்கடி #பால்கொடுத்தல்
♥குறிப்பிட்ட சில காலங்களில், குழந்தைகள் அதிக அளவு பால் குடிப்பார்கள். ஓரிரு நாளைக்கு 12 - 15 முறை பால் கொடுப்பது தொடர்ச்சியாக பால் கொடுத்தல் என்று கூறப்படுகிறது. இரு மார்பகங்களிலும் மாற்றி பால் கொடுங்கள். குழந்தை மற்ற மார்பகத்தை நிராகரித்தால் கவலையடையாதீர்கள். குழந்தைக்கு வேண்டுமான சமயத்தில் பால் கொடுங்கள், நீங்களாக கால அட்டவணை ஏற்படுத்தி கொண்டால் அது பால் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது உங்கள் குழந்தையின், மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கும்.
8 #மார்பகத்தை_புறக்கணித்தல்
♥குழந்தை அதிகமாக தூங்கி கொண்டிருந்தாலோ அல்லது தாய்ப்பால் குடிக்க மறுத்தாலோ, அது பிறப்பினால் ஏற்பட்ட பாதிப்பாகவோ அல்லது பிரசவ கால வலி நிவாரணி எடுத்து கொண்டதன் விளைவாக குழந்தையின் செய்கை அப்படி இருக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் குழந்தையை அருகிலேயே வைத்து கொள்ளுங்கள், இது குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்க உதவும். தாய்ப்பால் கொடுக்க தேக்கரண்டி, கப் அல்லது புட்டிகளை பயன்படுத்தி நீங்கள் முயற்சி செய்யலாம்.
9 #மார்பகஅலர்ஜி
♥மார்பக அலர்ஜி என்பது பாக்ட்டீரியாவினால் ஏற்படக் கூடிய நோய் தொற்றாகும். காய்ச்சல் மற்றும் மார்பகத்தில் வலி போன்றவை இதன் அறிகுறிகள். குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் இது சாதாரணமான ஒன்று மற்றும் மார்பக காம்புகளில் வெடிப்பு, பால் கட்டி கொள்ளுதல் மற்றும் சிவந்து காணப்படுதல் இதன் அறிகுறிகளாகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வெப்ப அழுத்தங்கள் மற்றும் மிக முக்கியமாக அடிக்கடி மார்பகத்தை காலி செய்வது சிறந்த சிகிச்சை முறையாகும். நோய் தொற்று இருக்கும் போது குழந்தைக்கு பால் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
10 #வெண்புண்
♥இது குழந்தையின் வாயில் இருக்கும் ஈஸ்ட் தோற்றாகும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகத்திற்கு பரவுகிறது. இது அரிப்பு, புண் மற்றும் தடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்களும், குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அவர்களுக்கும் உபயோகியுங்கள். நீங்களும் குழந்தையும் ஒரே சமயத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில், குணமடைய நீண்டகாலம் எடுக்கும்

Post a Comment

0 Comments