ஆன்மீகம்
*ராவணனைப் போன்றே அவன் மனைவி மண்டோதரியும் சிறந்த சிவ பக்தை*.
ஒரு சமயம் சிவபிரானை குழந்தை வடிவில் தரிசிக்க விழைந்த அவள், அதற்காக கடும் தவம் புரிந்தாள்.
அதேசமயம், உக்கிரகோச மங்கை எனும் திருத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் ஒன்றுகூடி சிவபிரானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குக் காட்சியளித்த சிவபிரான் தன் கையிலிருந்த சிவ ஆகமங்களை, அவர்களிடம் தந்தார். இலங்கைக் கோன் ராவணன் பத்தினிக்கு தான் காட்சியளிக்கச் செல்வதாகவும், திரும்பி வரும் வரை ஆகமங்களைப் பாதுகாக்கும்படியும் கூறினார்.
அதோடு, மழலையாய்த் தவழும் தன்னை ராவணன் தீண்டும் சமயத்தில் அங்கிருந்து மறைந்து ஜோதி வடிவான அக்னிப் பிழம்பாக அக்கோயில் குளத்தினில் தோன்றி அவர்களுக்கு மீண்டும் காட்சியருள்வதாகக் கூறி மறைந்தார்.
பின்னர், அழகே உருவான குழந்தை வடிவில் மாதரசி மண்டோதரிக்குக் காட்சியளித்தார் ஈசன்.
வந்தவர் யார் என உணர்ந்து கொண்ட மண்டோதரி, தன் தவம் நிறைவேறியதால் மகிழ்ந்தாள்.
மழலையாய் இருந்த மகேசனை வாரியணைத்து எடுத்து, சீராட்டினாள்.
அப்போது அங்கு வந்த ராவணன், அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான்.(ச.க.ம.19.6.18) அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ராவணன், அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான்.(ச.க.ம.19.6.18) அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது.
யார் பெற்ற குழந்தை இது?
என அவன் வினவ, மண்டோதரி, நடந்ததைச் சொன்னாள். ஈசனின் நேசனான ராவணன், மகிழ்வோடு அந்த மழலையை எடுத்துக் கொஞ்ச, உடனே சிவபிரான் அங்கிருந்து மறைந்து, உத்தர கோச மங்கை தலத்தின் திருக்குளத்தில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார்.
அவரைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் பரவசமடைந்து, ஜோதியில் பாய்ந்து நீரில் மூழ்கினர். ஒரே ஒரு முனிவர் மட்டும் இறைவன் கொடுத்த ஆகமங்களைக் காப்பதே தன் கடமை என இறைகட்டளைக்கு பணிந்து அங்கேயே காத்து இருக்கிறார்.
(பதிவு.ச.கணேசன். மதுரை. 19.6.18.)
அதன் பின்னர் இறைவன் உமையவள் சகிதராக விடைமேலமர்ந்து காட்சியருளினார்.
மூழ்கிய முனிவர்கள் ஒவ்வொருவரும் லிங்க வடிவில் இறைவனோடு ஒன்ற, இறைவன் நடுவில் வீற்று சகஸ்ரலிங்கமாக அமர்ந்தார்.
எஞ்சியிருந்த முனிவரை தன் உயிரினும் பெரிதாய் சிவாகமங்களைக் காத்ததால், அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்யுமாறு அருளி மறைந்தார் எம்பெருமான்.
அந்த எஞ்சிய தொண்டரே #மாணிக்கவாசகராய் அவதரித்தார்.
மகேசனின் புகழ்பாடி மண் சிறக்க வகை செய்தார்.
#மாணிக்கவாசகப் பெருமானின் அவதாரத்திற்கு மண்டோதரியின் பக்தியும் ஒரு காரணமாயிற்று.
நட்புடன்!!!!!!!!!
நட்புடன்!!!!!!!!!
0 Comments
Thank you