நீ உடுக்கும் உடையில்
சாதி பார்த்தால்
நீ
நிர்வாணமாய்
அலையவேண்டியிருக்கும்!
சாதி பார்த்தால்
நீ
நிர்வாணமாய்
அலையவேண்டியிருக்கும்!
நீ உண்ணும் உணவில்
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !
நீ சுவாசிக்கும் காற்றில்
சாதி பார்த்தால்
மூச்சடக்கியே
உன்னை
மண்ணில் அடக்க
வேண்டியிருக்கும்!
சாதி பார்த்தால்
மூச்சடக்கியே
உன்னை
மண்ணில் அடக்க
வேண்டியிருக்கும்!
நீ குடிக்கும் தண்ணீரில்
சாதி பார்த்தால்
உன்
நாக்கு வறண்டே
நாய் போல் தொங்க வேண்டியிருக்கும் !
சாதி பார்த்தால்
உன்
நாக்கு வறண்டே
நாய் போல் தொங்க வேண்டியிருக்கும் !
இதில் எல்லாம்
சாதியை காட்டி
வாழ்ந்து பார்!
சாதியை காட்டி
வாழ்ந்து பார்!
நான் ஒப்புக்கொள்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
நீ உயர்ந்த சாதியென்று !
உலகையும் உன் காலில்
விழச்சொல்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
விழச்சொல்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
சாதி பார்த்துதான்
வாழ்வேன் என்றால்
நீ வாழ்வதற்கு
ஏற்ற இடம்
பூமி அல்ல !
வாழ்வேன் என்றால்
நீ வாழ்வதற்கு
ஏற்ற இடம்
பூமி அல்ல !
0 Comments
Thank you