♥எனக்குத் திருமணமான வருடம்.
தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவேன்.
வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன்.
♥கீழே ரோட்டிற்கு இறங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும்.
காலில் செருப்போடு சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும்.
♥எனவே காலில் செருப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன்.
என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன்.
♥இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும்.
ஒரு நாள் என் மைத்துனன், எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்கு வந்தான்.
நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து கொடுப்பதையும் கவனித்து வந்தான்.
♥மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப் போனவனை, என் மாமனார் மாப்பிள்ளை எப்படி என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவன் சொன்ன பதில்...........
♥மாமா மற்ற விஷயங்களில் நன்றாகத்தான் இருக்கிறார்.
*ஆனால், அக்கா கையில் செருப்பை எடுத்தால்தான், மாமா ஆபீஸ் போகிறார்.*
♥இப்படித்தான் எல்லோருக்கும் தகவல்கள் பரிமாற்றப்படுகிறது
0 Comments
Thank you