மூன்று விசயங்கள் ஆரம்பித்திலேயே சொல்லிவிட்டு கட்டுரையை ஆரம்பிக்கின்றேன்.
1.நான் தாலிகட்டும்முறைக்கு எதிரானவன் அல்ல.
2.தாலி எப்படிக்கட்டவேண்டும் என்பது அவனவன் இஷ்ட்டம் , சுதந்திரம்.
3.இது நான் கடைப்பிடிக்கப்போவதே தவிர வேறு யாரையும் வற்புறுத்தவில்லை.
தாலி என்றால் என்ன?
_______________________________
#தாலிப்பனைகள் என்றே ஒருவித பனைகள் உண்டு.முன்னைய காலங்களில் கணவன் மனைவி ஆகிய இருவரின் பெயரையும் ஊர்த்தலைவர் அந்தப்பனையின் ஓலையில் எழுதி அதை ஒரு செப்புக் கூட்டுக்குள் அல்லது ஏதாயினும் உலோகக்கூட்டுக்குள் அல்லது மஞ்சள்கட்டையை குடைந்து அதற்குள் வைத்து.மஞ்சள் நூலில் பிணைத்து ஊரார் முன்னிலையில் மணமகள் கழுத்தில்க் கட்டப்படும்.
நூலில் தாலிகட்டினால் கண்டிப்பாக ஒரு வருடத்தில் அந்த நூலை மாற்றவேண்டியதேவை வரும்.ஆகவே வருடாவருடம் தங்கள் திருமணநாள் அன்று கணவன் தன் மனைவியின் கழுத்தில் தாலி கட்டுவார்.உறவு புதுப்பிக்கப்படும்.கணவன் மனைவி உறவிடை நெருக்கம் அதிகரிக்கவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
திருடர்களுக்குப்பயப்படவேண்டிய தேவையில்லை.பாரமாக இருக்காது.இருபத்துநான்குமணிநேரமும் கழுத்தில் கட்டியிருக்கமுடியும்.அது ஒரு பெண்ணுக்குத் தன் அருகிலேயே எந்தநேரமும் கணவன் இருப்பது போன்ற உணர்வையும் தைரியத்தையும் தரும்.இதை எல்லாம் தாண்டி எளிமையும் தெய்வீகத்தன்மையையும் மஞ்சள்நூல் கொடுக்கும்.
அதுக்கு இப்ப என்ன? நீங்க என்னசொல்லவாரீங்க?
_________________________________________
அதுக்கு ஒன்றுமில்லை எனக்கு இந்த 15 பவணில் தாலிகட்டுதல் 21 பவுணில் கட்டுதல் இதில் எல்லாம் உடன்பாடு இல்லை.
முதலாவதும் மிகமுக்கியமானதுமான பிரச்சனை அந்தத்தாலியை இருபத்துநான்குமணிநேரமும் கட்டியிருக்கமுடியாது.தனியாக அந்தத்தாலியோடு வெளியே பயமில்லாமல் தைரியமாக உலவமுடியாது.
பெரும்பாலும் இப்படி 15பவுண் 21பவுண் தாலி என்பதை ஒருவித கௌரவம் என்பதுபோன்ற மாயையை உருவாக்கியிருக்கிறார்கள்.இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது என்னவோ ஆசிரியர்கள்தான்.லோன் எடுத்துத்தாலிகட்டுபவர்கள் கூட இருக்கிறார்கள்.பிறகு வாயைக்கட்டி வயித்தைக்கட்டி அந்தக்கடனை அடைக்கப்பாடுபடுவார்கள்.
ஒருசிறிய வாழ்க்கை அதிலே மகிழ்ச்சி என்பது மிகமுக்கியம்.தாலிக்குள் முடக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையைப்பயன்படுத்தி தேன்நிலவு செல்பவர்கள் எத்தனைபேர்?
இன்றைய திகதிக்கு ஒருபவுண்நகை இலங்கை விலையில் தோராயமாக ஒரு லட்சம் ரூபாய்கள்.யோசித்துப்பார்த்தேன் 21 பவுணில் தாலிகட்டுவதைவிட அளவாக ஒரு 5 பவுணில் கட்டிவிட்டு மனைவிக்கு அன்புப்பரிசாக ஒரு காணியை வாங்கிக் கொடுத்தால் அது எதிர்காலத்திலும் பயன்படுலாம்.மனைவியின் கழுத்திலும் எந்தநேரமும் தாலியுமிருக்கும்.
ஒருவேளை நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புத்திசாதுர்யமாக 21 பவுணுக்கு செலவுசெய்யும் பணத்தை ஏதாவது சுய தொழிலில் முதலிடுமாறுதான் செய்வேன்.
வசதிபடைத்தவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டுமே மத்தியதரவகுப்பு(middle class) மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும்.தாலிக்கு வாங்கிய கடனை அடைக்க வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது.
சின்னவாழ்க்கை யோசித்து திட்டமிடுங்கள்.
0 Comments
Thank you