பெருவிரல்கள் இரண்டையும்
ஒன்றே கூட்டி
கொலுசு ஒலிகளை காதில் ஊட்டி
கெண்டை காலில் தூரி கட்டி
குலவை சத்தங்களை பார்வையில் ஊட்டி
குல மகள் ராதை ஆடி அசைந்தாள்
நீராட நீ ஆட தாலாட்டி அவள் மகிழ
நலுங்காமல் நீ வாழ நலுங்கு பொடி தேய்த்தவளே
விடியல் வாழ்வு நீ வாழ
நீவீ நீவீ தேய்த்தவளே
தலை துவட்டி காதுகளில் ஊதி
உடம்பை ஊதி வளர்த்தவளே
உணவில் பாதி உள்ளத்தில் பாதி
உணவு இட்டு வளர்த்தவளே
மீதம் இருந்தால் உண்டு மகிழ்வாள்
வஞ்சனை இல்லாமல் வாரி கொடுத்து
முல்லைக்கு தேர் போலே
முத்தமிட்டு வளர்த்த தாய் ❤
0 Comments
Thank you