அப்போது மகனாய் அத்தனையும் கடமைகள் எனத்தான் நினைத்தேன் 🌷🧩🌷
இப்போதுதான் புறிகின்றது அது கடமைகள் அல்ல அத்தனையும் தாண்டிய ஆனந்தம் அதுதான் என்று .....🌷🧩🌷
இன்றும் கூறுகின்றேன் உங்களிடம் கற்ற பாடங்களை வைத்து உங்களைப்போல நல்ல தந்தையாய் இருப்பேன் என்றும்.....
#அப்பா அம்மா உங்களை அறிமுகபடுத்தியிருந்தாலும்
-எனக்கு அடையாளம் தந்தவர் நீங்கள்!
முள்ளு மீசையும் முத்தான சிரிப்பும்
-உங்கள் முகத்துக்கே அழகு!
என்னை சுமந்த அன்னையையும்
என்னையும் என் உடன் பிறப்புகளையம் சேர்த்து தாங்கினீர்கள் தூணைபோல!
-நாங்கள் தலை நிமிர்ந்து நடப்பதற்காக!!
துணிவான நடையும். தூய உள்ளமும்
உங்கள் அடையாளம்!
வருமையிலும் எங்களை
வாட விட்டதில்லை நீங்கள்!
உலகளாவிய உங்களின் அறிவு !
என்னை வியக்கவைத்தவை!
அகவை அறுபதை கடந்தாலும்
அகம் திறந்த உங்களின் பேச்சும்
அன்பான அனுகுமுறையையும்
உங்களின் தனிச்சிறப்பு!
உங்களை பார்த்து என்
உள்ளத்துள் ஏற்றேன்
உருதிமொழி நானும்
உங்களை போல நல்ல தந்தையாய் இவ்வுலகில் வாழனுமென்று !
தாயின் பெருமையை
உடன் உணரும் நாம்
தந்தையின் பெருமையை
காலம் கடந்தே உணர்கின்றோம்!
இவ்வரிகள் என் தந்தைக்காக..... 🌷🧩🌷
0 Comments
Thank you