#அப்பா
♥உன் ஒரு துளி ரத்தத்தில் உருவானவளாக இருக்கலாம், ஆனால் என் ஒவ்வொரு திசுக்களும் உந்தன் பிம்பங்கள்.
♥உள்ளங்கையில் என்னை நிறுத்தி நி பார்த்து ரசித்தாய் அன்று, கரடு முரடான
வாழ்க்கை பாதையும் துணிச்சலுடன்
கடந்து போகிறேன் இன்று
♥கண்ணுக்கு முன்னாள் உன் உயிர்
பிரிவதை பார்த்தும் கூட , அது கெட்ட
கனவாக இருக்குமோ என்று கண் விழிக்கையில் நினைக்கிறேன் இன்றும்
♥ஏக்கங்களும், பரிதாபங்களும், வேதனைகளும், எதிர்பார்ப்புகளும்
நிறைந்து கடந்த வாழ்க்கையில்,
நி எழுதிய கைஏடுகளில் இருந்த
எழுத்துக்களை தொட்டு அழுவதற்கு
மட்டுமே கொடுப்பனை இருந்தது எனக்கு
♥நி உடுத்தியிருந்த பழைய சட்டையை
அணிந்து கொண்டு உன் அரவணைப்பில் இருப்பதாக நினைத்து உறங்கிய காலங்களும் நினைவில் உண்டு
♥என்னதான் பார்த்து கொண்டாலும் அப்பா நி இல்லாத இடத்தை யாரால் நிரப்ப முடியும் எத்தனை வருடம் ஆனால் என்ன என் தலை முடிகளும் கூட நிரைத்தால் என்னஅப்பா பாசத்திற்கு ஏங்கும் மகளாக தான் இருப்பேன் என் மரணம் வரை
♥அடுத்த பிறவியை பற்றிய பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை, அப்படி ஒன்று இருந்தால்
அதிலும் உன் மகளாக பிறக்க வேண்டும்
எதற்காக தெரியுமா, நான் நிலைதடுமாறும் ஒவ்வொரு வேளையும் என் முதுகில் கை வைத்து, "நி ஏப்பா பயப்புடுற அப்பா இருக்கேன் உன்னோட " என்று நி சொல்லும்
அந்த சொல்லை கேட்க.
0 Comments
Thank you