HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR 

♥ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!

♥1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

♥பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.

♥2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக  வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

♥3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

♥4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

♥5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.

♥6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.

♥7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

♥8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும்.
நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது!

Post a Comment

0 Comments