♥தொழில் மரியாதையும்... சுய மரியாதையும்..!
♥செருப்பு கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார். கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.
♥இது செருப்பு வாங்க வந்த கஸ்டமருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார் கஸ்டமர். ஆனாலும், பணியாளர் விடவில்லை.
♥பணியாளர் தொடர்ந்து அவருக்கு உதவினார். கஸ்டமர் பெருந்தன்மையாக சொன்னார் 'ஐயா! நானும் மனிதன், நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது"
♥பணியாளர் சிரித்தபடி சொன்னார்.
'இந்த கடைக்கு வெளியே போய்விட்டால், நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன்". அது என்னுடைய சுய மரியாதை!
♥கடைக்குள் நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். இது என்னுடைய தொழில் மரியாதை என்றார்.
0 Comments
Thank you