HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

முன்னோர் அறிவியல்.!!!

♥முன்னோர் அறிவியல்.!!!       
   
♥காலங்காத்தால...ஒருபொம்பளப்புள்ள
இப்படியா தூங்குறது...
எந்திரிச்சு வாசப்பெருக்கி தெளித்து
கோலம்போடுடி ...மூதேவி வந்து
அண்டிரப்போகுது என விரட்டிய
அப்பத்தாளிடம் இருந்தது...
ஆன்மீகமோ மூடநம்பிக்கையே இல்லை
காலைக்காற்றும் குனிந்து நிமிர்தலும்
வளரும் பெண்பிள்ளையின்
கருப்பைக்கு நல்லது என்ற அறிவியல்..

♥அடியேய் தலவாசல்ல..
வாளில தண்ணிவை என்றதும்
ஏம்ப்பு இது என்ன பழக்கம்
காடுமேடலாம் சுத்திட்டு
கைகாலு கழுவாம அப்டியே
வீட்டுக்குள்ள வர்றது...
சனியன வீட்டுக்குள்ள கூப்புடவா
என்ற பாட்டியின் திட்டில்
இருந்தது மூடநம்பிக்கை இல்லை
கிருமிகளை அழித்துவிடும் அறிவியல்
இன்று கொரனா வந்து ஞாபகப்படுத்தி இருக்கிறது...

♥ஆத்தி என்னதிது..
தீட்டானவ ஊட்டுக்குள்ள பொழங்குறது
சாமிகுத்தமாயிடாது...
என பய முறுத்திய அம்மாச்சியிடம்
இருந்தது ஆன்மீகமல்ல..
கிருமித்தொற்றும் கெட்டவாடையும்
பரவிவிடக்கூடாது என்ற அக்கறையும்
உடலுக்கு ஓய்வுதேவை என்ற அறிவியலும்...

♥இந்தா வாயத்திற...விசத்தையா
தாறாய்ங்க குமட்டிட்டு கிடக்குறவ
என இடித்துக்கொண்டே...
புகட்டப்பட்ட நல்லஎண்ணெய்யிலும்
நாட்டுக்கோழி முட்டையிலும்
உழுந்தகளியிலும்...
இடுப்புப்பகுதிக்கு தேவையான
அனைத்து அறிவியலும் இருந்தது..

♥என்னத்தா வயித்துப்புள்ளக்காரி..
எப்பப்பாரு முடங்கியேவா கிடக்கிறது என கனிவாகவும்...
இந்தா உன் புள்ளைக்கு ஒன்னும் வலிச்சிராது ..குனிஞ்சு நிமிந்து
கனமில்லாத...
வேலையப்பாரு என்ற அதட்டலில்..
சிசேரியன் தேவையின்றி இருந்தது..
ஏன்டி சின்னச்சிறுக்கி..
இந்த சீரகத்தண்ணிய கடக் கடக்னு
முழுங்கிடு...
என்னடி ஆத்தா இப்டி ஆயாவ
கண்டு வெட்கப்படுறவ பாவடைய தளத்து என அடிவயிற்றில்
தேய்க்கப்படும் விளக்கெண்ணெயில்..
சூட்டு வலியும் பிரசவலியும்
பிரித்து ஆராயப்பட்டது...

♥இந்தாத்தா...வயிறுவலிக்கத்தான்
செய்யும் பச்சஉடம்பும்புல..
ஆனாலும் என் ராசாத்தி
பாவடைய இறுக்கிகட்டுடி
என வந்த அக்கறையில்..
கர்ப்பப்பையில் காற்று ஏறுவது
தடுக்கப்பட்ட அறிவியல் இருந்தது..

♥அட என்னடி இது கூத்து
புள்ளக்கு மல்லாந்துபடுத்து
பால்கொடுக்குறவ
மாடு கூட இப்டி பண்ணாதுஎன்ற
குத்தலில்...
நாசியில் புரையேறிடும் குழந்தைக்கு
என்ற அறிவியல் இருந்தது..

♥இந்தா எப்பபாரு
வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு.. வேர்க்காது
அவுத்துவிட்டு ராசா கணக்கா நடப்பு
என்ற பாசத்தில்..
விந்தணுவின் வீரியம் காக்கப்பட்டது
ஏய்யா புதுப்பொண்டாட்டியகூட்டிட்டு
கோயிலு குளம்னு நாலு இடம்போயிட்டுவர்றது
என்ற கனிவில்...
கலவியின் ஆயக்கலைகள்அறுபத்திநான்கும்
கோவில் கோபுரத்திலும் சிற்பத்திலும்
இருக்கு கத்துக்கோ என்ற மறைமுக உண்மை இருந்தது...

♥என்னப்பு மேலுக்கு முடியலயா..
என்னத்தா மசமசனு இருக்கா..
ஏன்டா பேராண்டி ராவலாம் கத்துற
ஏன்டி பேத்தியா எப்ப நீ பேசி
இந்த கிழவிட்ட சண்டைக்கு வர்றது
என விசாரித்தலில்...
அத்தனைக்கும் கைவசம் கைவைத்தியம் பார்க்கப்பட்டது...
என்னப்பு...என்னதான் வேலைனாலும்..
காலைச்சோத்தயா வேணாங்கிறது..
இந்தா ரெண்டுவாய் கஞ்சியும் வெங்காயமும் குடி..என்ற மிரட்டலில்
அன்றைய பொழுதுக்கான..
நோய்எதிர்ப்பு சக்தி ஊட்டப்பட்டது
ஏப்பு..வெயில்ல கிடந்துட்டு
காபி தண்ணியவேவா குடிக்கிறது
இந்த ரெண்டு இளநிய குடி
என்ற பாசத்தில் அறிவியலும்
அம்சமாய் இருந்தது..

♥தனிக்குடித்தனம் என்று..
வீட்டு பெரிசுகளை தனியாய் விட்டது
முதல் புடித்த சனி...
நாகரீகம் என்ற பெயரில்..
அய்யே கம்பங்கஞ்சியா என
அலட்டிக்கொண்ட அகராதி..
நாங்கலாம் நவீனமாக்கும்என
குழாய் மாட்டி திருந்த பவுசு
ஹாய் என்ற கைலுக்கலில்
பரவத்தில் பாழாய்ப்போன பாங்கு
அத்தனையும் சேர்த்து..
வருசத்துக்கொரு நோய்க்கு..
கம்பளம் விரித்து காத்துக்கொண்டிருக்கிறோம்..

Post a Comment

0 Comments