♥இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.
♥மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.
♥''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார்.
♥அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் வசதியானவள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார்.
♥மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார்.
♥ தேவையற்ற எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் !!!!
0 Comments
Thank you